உள்ளூர் செய்திகள்

/ உள்ளூர் செய்திகள் / சிவகங்கை / வளர்ச்சி பணிக்கு நிதி இல்லை ஒன்றிய கூட்டத்தில் தலைவர் வருத்தம்

வளர்ச்சி பணிக்கு நிதி இல்லை ஒன்றிய கூட்டத்தில் தலைவர் வருத்தம்

இளையான்குடி,: ஒன்றியத்தில் போதிய நிதி ஆதாரம் இல்லாததால் வளர்ச்சி பணிகளை மேற்கொள்ள முடிவதில்லை என ஒன்றிய கூட்டத்தில் தெரிவித்தனர்.இளையான்குடி ஊராட்சி ஒன்றிய கூட்டம் தலைவர் முனியாண்டி தலைமையில் நடந்தது.பி.டி.ஓ.,க்கள் முத்துக்குமரன் பாலசுப்பிரமணியன் முன்னிலை வகித்தனர்.கூட்டத்தில் நடந்த விவாதங்கள்:சண்முகம் அ.தி.மு.க., கவுன்சிலர்: புதுார் வலசையில் உள்ள கால்வாயில் பாலம் வசதி இல்லாத காரணத்தினால் மழை காலங்களில் தண்ணீர் சூழ்ந்து கொள்கிறது. பள்ளிக்குச் செல்லும் ரோடு, அண்டக்குடி மயான சாலை மோசமான நிலையில் உள்ளதால் பொது நிதியிலிருந்து உடனடியாக அமைக்க நடவடிக்கை எடுக்க வேண்டும். கூட்ட அரங்கிற்கு 'ஏசி' தேவையில்லாதது.செழியன் தி.மு.க., கவுன்சிலர்: கீழ சூராணம் ரோடு போடப்பட்டு பல ஆண்டுகளான நிலையில் சூராணத்தில் கடந்த 3 மாதங்களுக்கு முன்பு அடிப்படை வசதிகளை நிறைவேற்ற கோரி நடைபெற்ற மறியல் போராட்டத்திற்கு பின்பு உடனடியாக சரி செய்யப்படும் என்று அதிகாரிகள் கூறினர். ஆனால் இதுவரை ஒரு வேலை கூட நடக்கவில்லை. ஒன்றிய கவுன்சிலராக மக்கள் முகத்தில் முழிக்க முடியாத அளவிற்கு கவுன்சிலராக செயல்படுவதற்கு பதிலாக ராஜினாமா செய்து விடலாம்.தலைவர் முனியாண்டி அ.தி.மு.க.: சட்டியில் இருந்தால் தானே அகப்பையில் வரும் என்பதைப் போல கடந்த காலங்களில் வருடத்திற்கு ரூ.80 லட்சம் நிதி வந்தது. தற்போது ஆண்டிற்கு 20 லட்சம் கூட வருவதில்லை.ஆகவே திட்ட பணிகளை செய்ய முடியாத நிலையில் உள்ளோம்.முருகானந்தம் தி.மு.க., கவுன்சிலர், சீமைச்சாமி அ.தி.மு.க., கவுன்சிலர்: நிதி நெருக்கடியில் தள்ளாடும் நிலையில் அலுவலகத்தை சுற்றி ரூ.16 லட்சம் செலவில் சுற்று சுவர் கட்டுவது தேவையற்றது.பி.டி.ஓ.,: நிதி நிலையை பொறுத்து ஒன்றிய கவுன்சிலர்களின் ஒப்புதலோடு கட்டுவதற்கு நடவடிக்கை எடுக்கப்படும்.கூட்டத்தில் ஊராட்சி ஒன்றிய பணியாளர்கள் மற்றும் அரசு துறை அதிகாரிகள் கலந்து கொண்டனர்.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

மேலும் செய்திகள்



சமீபத்திய செய்தி