தமறாக்கியில் வட மஞ்சுவிரட்டு
சிவகங்கை: சிவகங்கை அருகே தமறாக்கி கலியுக வரத ஐயனார் கோயில் திருவிழாவை முன்னிட்டு வட மஞ்சுவிரட்டு நடந்தது. இதில் சிவகங்கை, மதுரை, தேனி, தஞ்சாவூர், திண்டுக்கல், ராமநாதபுரம் மாவட்டங்களை சேர்ந்த 15 காளைகளும், 125 மாடு பிடி வீரர்களும் பங்கேற்றனர். ஒரு காளைக்கு 25 நிமிடம் ஒதுக்கப்பட்டு, 9 வீரர்கள் களம் இறக்கப்படுவர். அதில், காளையை அடக்கினால் வீரர்களுக்கும், காளை வெற்றி பெற்றால் அதன் உரிமையாளருக்கும் பரிசு வழங்கப்படும். சிவகங்கையில் நடந்த வடமஞ்சுவிரட்டில் 18 காளைகளும், 162 மாடுபிடி வீரர்களும் பங்கேற்றனர். காளைகள் முட்டியதில் வீரர்கள் 7 பேர் காயமுற்றனர்.