உள்ளூர் செய்திகள்

/ உள்ளூர் செய்திகள் / சிவகங்கை /  6189 வாக்காளருக்கு நோட்டீஸ் 

 6189 வாக்காளருக்கு நோட்டீஸ் 

சிவகங்கை: மாவட்டத்தில் உள்ள நான்கு சட்டசபை தொகுதிகளில் எஸ்.ஐ.ஆர்., விண்ணப்பத்தை சரியாக பூர்த்தி செய்யாத 6,189 வாக்காளர்களுக்கு நோட்டீஸ் கொடுக்கப்பட உள்ளது. வாக்காளர் சிறப்பு தீவிர திருத்தப்பணி முடிவுற்று மாவட்ட வாரியாக வரைவு வாக்காளர் பட்டியல் வெளியிடப்பட்டுள்ளது. இந்த 4 தொகுதியிலும் இறப்பு, இடம் பெயர்வு, இரட்டை பதிவு, கண்டறிய முடியாதது, இதர வகை வாக்காளர் என 1 லட்சத்து 50 ஆயிரத்து 828 வாக்காளர்கள் நீக்கப்பட்டுள்ளனர். மாவட்டத்தில் எஸ்.ஐ.ஆர்., படிவத்தை சரியாக பூர்த்தி செய்யாத 6,189 வாக்காளர்களுக்கு தேர்தல் கமிஷன் நோட்டீஸ் அளித்துள்ளது. இவர்களிடம் அந்தந்த பகுதி ஓட்டுச்சாவடி அலுவலர்கள் நேரடி விசாரணை செய்து, படிவத்தை உரிய ஆவணங்களுடன் முழுமையாக பூர்த்தி செய்து, பட்டியலில் சேர்ப்பதற்கான நடவடிக்கைகளில் ஈடுபடுவார்கள் என தெரிவிக்கப்படுகிறது.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

மேலும் செய்திகள்



முக்கிய வீடியோ