உள்ளூர் செய்திகள்

/ உள்ளூர் செய்திகள் / சிவகங்கை / அமைச்சர் வருகை எதிரொலி பள்ளங்களை நிரப்பிய அதிகாரிகள்

அமைச்சர் வருகை எதிரொலி பள்ளங்களை நிரப்பிய அதிகாரிகள்

திருப்புவனம்: திருப்புவனத்தில் அமைச்சர் வருகையை முன்னிட்டு நெடுஞ்சாலைத்துறையினர் இரவோடு, இரவாக சாலை பள்ளங்களை சரி செய்தது மக்களிடையே அதிருப்தியை ஏற்படுத்தியுள்ளது.திருப்புவனத்தில் அம்ரூத் 2.0 திட்டத்தின் கீழ் பல இடங்களில் தார்ச்சாலை பெயர்த்து எடுக்கப்பட்டு குண்டும் குழியுமாக காட்சியளிக்கிறது. மழை காரணமாகவும் தார்ச்சாலை சேதமடைந்து பல இடங்களில் மேடு பள்ளமாக காணப்படுகிறது.பள்ளங்களில் மழை காலங்களில் பலரும் தவறி விழுந்து காயமடைந்து வந்தனர். ஒரு வருடத்திற்கும் மேலாக சாலையை சரி செய்ய கோரி பொதுமக்கள் கோரிக்கை விடுத்தும் கண்டு கொள்ளவே இல்லை. யூனியன் அலுவலகத்தில் இருந்து சிவகங்கை திரும்பும் சாலையில் நீண்ட பள்ளத்தில் தினசரி டுவீலரில் செல்பவர்கள் விழுந்து காயமடைந்தனர்.நேற்று கீழடியில் திறந்த வெளி அருங்காட்சியக கட்டட பணிகளை பார்வையிட நெடுஞ்சாலைத்துறை அமைச்சர் வேலு வருவதை அறிந்ததும் இரவோடு, இரவாக சாலைகளில் உள்ள பள்ளங்களை போர்க்கால அடிப்படையில் நெடுஞ்சாலைத்துறையினர் சரி செய்து விட்டனர்.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

அதிகம் விமர்ச்சிக்கப்பட்டவை