மஞ்சுவிரட்டில் ஒருவர் பலி 164 பேர் காயம்
சிவகங்கை:சிவகங்கை மாவட்டம், கண்டுப்பட்டியில் ஆண்டு தோறும் மஞ்சு விரட்டு நடப்பது வழக்கம். கிராமத்தை சுற்றியுள்ள கண்மாய் மற்றும் பொட்டல் பகுதியில் நேற்று காலை, 10:00 மணியில் இருந்தே காளைகள் அவிழ்த்து விடப்பட்டு, மஞ்சுவிரட்டு நடத்தப்பட்டது. காளைகளை பிடிக்க நுாற்றுக்கணக்கான மாடுபிடி வீரர்கள் களத்தில் இறங்கினர். கூட்டுறவுத்துறை அமைச்சர் பெரியகருப்பன் கொடியசைத்து துவக்கி வைத்தார். மஞ்சுவிரட்டை வேடிக்கை பார்த்த குன்றக்குடி அருகே கொரட்டி கிராமத்தை சேர்ந்த சண்முகம், 70, மாடு முட்டியதில் பலியானார். மேலும், 164 பேர் காயமடைந்தனர். காயமடைந்தவர்கள் சிவகங்கை மருத்துவமனைக்கு கொண்டு செல்லப்பட்டனர்.