உள்ளூர் செய்திகள்

/ உள்ளூர் செய்திகள் / சிவகங்கை / ஆன்லைனில் ரூ.16 ஆயிரம் மோசடி

ஆன்லைனில் ரூ.16 ஆயிரம் மோசடி

சிவகங்கை: சிவகங்கை மாவட்டம் சிங்கம்புணரியில் சிங்கப்பூரில் வேலை வாங்கி தருவதாக கூறி ரூ.16 ஆயிரம் மோசடி செய்தவரை போலீசார் தேடி வருகின்றனர்.சிவகங்கை மாவட்டம் சிங்கம்புணரி அருகே வேங்கம்பட்டியை சேர்ந்தவர் கோகுல கிருஷ்ணன் 25. இவரது வாட்ஸ் அப்பில் பேசிய நபர் சிங்கப்பூரில் வேலை வாங்கித் தருவதாகக் கூறி பணம் அனுப்பக் கூறியுள்ளார். அவர் கூறிய ஜி பே எண்ணிற்கு கோகுல கிருஷ்ணன் ரூ.16 ஆயிரத்தை அனுப்பியுள்ளார். பணம் அனுப்பிய பிறகு தற்போது வரை எந்த பதிலும் சொல்லாமல் தன்னை ஏமாற்றி வருவதாகவும் தன்னை ஏமாற்றிய நபர் மீது நடவடிக்கை எடுக்குமாறு சிவகங்கை சைபர் கிரைம் போலீசில் புகார் அளித்தார். போலீசார் விசாரிக்கின்றனர்.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

மேலும் செய்திகள்





அதிகம் விமர்ச்சிக்கப்பட்டவை