| ADDED : மார் 06, 2024 06:42 AM
தேவகோட்டை : தேவகோட்டையில் சோமசுந்தரம் நகரில் நகர்ப்புற மேம்பாட்டுத் திட்டத்தின் கீழ் ரூ 40 லட்சத்தில் பூங்கா, காட்டூரணி ஊரணியில் ரூ 39 லட்சத்தில் ஊரணியை சீர்ப்படுத்தி சுற்றி நடைபாதை பூங்கா,அம்ருத் 2.0 திட்டத்தில் காடேரியம்பாள் நகரில் ரூ 42 லட்சத்தில் பூங்கா ஆகிய மூன்று பூங்காக்கள் புதிதாக உருவாக்கப்பட்டது. இதன் திறப்புவிழா கமிஷனர் பார்கவி தலைமையில் நடந்தது. நகராட்சி தலைவர் சுந்தரலிங்கம் திறந்து வைத்தார். துணை தலைவர் ரமேஷ் சி.சி.டிவி கண்காணிப்பு அறையை திறந்து வைத்தார். நிகழ்ச்சிகளில் கவுன்சிலர்கள் அய்யப்பன், பவுல் ஆரோக்கியசாமி, நிரோஷா, கமலக்கண்ணன்,லாவண்யா,ராதிகா, சுதா, பொறியாளர் மீராஅலி, நகராட்சி அலுவலர்கள், அப் பகுதியினர் பங்கேற்றனர்.