உள்ளூர் செய்திகள்

/ உள்ளூர் செய்திகள் / சிவகங்கை / கோடை துவங்கியும் விற்பனைக்கு வராத பதனீர்

கோடை துவங்கியும் விற்பனைக்கு வராத பதனீர்

திருப்புவனம் : தமிழகம் முழுவதும் கோடை வெயிலின் தாக்கம் நாளுக்கு நாள் அதிகரித்த வண்ணம் உள்ளது. தமிழகத்தில் ஏப்ரலில் தொடங்கி ஜூன் வரை வெயிலின் தாக்கம் இருக்கும்.கோடை வெயிலின் தாக்கத்தை தணிக்க பொதுமக்கள் இளநீர், பழச்சாறு, குளிர்பானங்கள், சர்பத் உள்ளிட்டவைகளை அருந்துவது வழக்கம். பதனீர் இந்த கோடை காலத்தில் அதிகமாக விற்பனை செய்யப்படுவது வழக்கம். மார்ச் தொடங்கி மூன்று மாத காலத்திற்கு பதனீர் விற்பனை செய்யப்படும் திருப்புவனம் வட்டாரத்தில் பனை மரங்கள் அவ்வளவாக இல்லாத நிலையில் வெளியூர்களில் இருந்து பதனீர் கொண்டு வந்து விற்பனை செய்கின்றனர். ஒரு லிட்டர் கடந்தாண்டு 100 ரூபாய் என விற்பனை செய்யப்பட்டது.இந்தாண்டு கோடை வெயிலின் உக்கிரம் அதிகரித்து வருகிறது. ஆனால் இது வரை திருப்புவனம் வட்டாரத்தில் பதனீர் விற்பனை செய்யப்படவே இல்லை. காரணம் போதிய அளவு பதனீர் கிடைக்கவில்லை. பல இடங்களில் பனை மரங்கள் வெட்டப்பட்டதால் பதனீர் கிடைக்கவே இல்லை. பரமக்குடி உள்ளிட்ட பகுதிகளில் இருந்து திருப்புவனத்தில் பதனீர் விற்பனை செய்யப்படும். இந்தாண்டு இதுவரை பதனீர் விற்பனை தொடங்கப்படவே இல்லை.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

புதிய வீடியோ