உள்ளூர் செய்திகள்

/ உள்ளூர் செய்திகள் / சிவகங்கை / பிள்ளையார்பட்டியில் நாளை முதல் பவித்ர உற்ஸவம்  

பிள்ளையார்பட்டியில் நாளை முதல் பவித்ர உற்ஸவம்  

சிவகங்கை; பிள்ளையார்பட்டி கற்பக விநாயகர் கோயிலை புனிதப்படுத்தும் விதமாக 'பவித்ர உற்ஸவ' பூஜை நாளை (ஆக., 1) முதல் ஆக., 3 வரை நடக்கிறது. இக்கோயிலில் நாளை காலை 6:00 மணிக்கு அனுக்கை, கணபதி ேஹாமம், பூர்ணாகுதி, தீபாராதனை, கலச அபிேஷகம், வாஸ்து சாந்தி, இரவு 8:45 மணிக்கு பாலிகை பூஜை, முதற்கால பூஜை, பூர்ணாகுதி நடைபெறும். ஆக., 2 காலை 8:15 மணிக்கு இரண்டாம் கால பூஜை (சாற்றுதல் பரிவாரம்), மதியம் 12:00 மணிக்கு பூர்ணாகுதி, தீபாராதனை நடைபெறும். மாலை 4:30 மணிக்கு மூன்றாம் கால பூஜை, அனைத்து மூலவர் சன்னதியில் உள்ள சுவாமிக்கு பவித்ரம் சாற்றுதல், இரவு 8:45 மணிக்கு பூர்ணாகுதி நடைபெறும். ஆக.,3 காலை 6:15 மணிக்கு நான்காம் கால பூஜைகள், பிரதான பவித்ரம் சாற்றுதல், காலை 11:00 மணி 4ம் கால யாக பூஜை, தீபாராதனை, மரியாதை, பிரசாதம் வழங்குதல் ஆகிய நிகழ்ச்சிகளுடன் பவித்ர உற்ஸவம் நடைபெறும்.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

அதிகம் விமர்ச்சிக்கப்பட்டவை