உள்ளூர் செய்திகள்

/ உள்ளூர் செய்திகள் / சிவகங்கை / நாட்டாகுடியை எட்டிப்பார்க்க தொடங்கியுள்ள மக்கள் 

நாட்டாகுடியை எட்டிப்பார்க்க தொடங்கியுள்ள மக்கள் 

சிவகங்கை : தொடர் கொலை, அடிப்படை வசதியில்லாத காரணத்தால் ஊரை காலி செய்துவிட்டு சென்ற நாட்டாகுடி மக்கள், அரசின் அடிப்படை வசதி கிடைத்ததும் நாட்டாகுடியை எட்டிப்பார்க்க தொடங்கியுள்ளனர். சிவகங்கையில் இருந்து 15 கி.மீ., தொலைவில் உள்ள குக்கிராமம் நாட்டா குடி. மாத்துார் கிராம ஊராட்சியின் கீழ் உள்ள 6 கிராமங்களில் விவசாயத்தை நம்பி மக்கள் வாழும் கிராமம். ஆரம்பத்தில் உப்பாறு ஆற்றில் இருந்து தண்ணீர் வந்ததால் நாட்டார் கண்மாய் நிறைந்து விவசாயம் செழிந்திருந்தது. அக்கால கட்டத்தில் விவசாயத்தை நம்பியே 150 குடும்பத்தினர் வாழ்வாதாரம் நடத்தி வந்தனர். காலப்போக்கில் விவ சாயம் பொய்த்து போனது. அதே நேரம் அடிப்படை வசதிகளான குடிநீர், தெருவிளக்கு, ரோடு இல்லாமல், அக்கிராம மக்கள் கல்வி, வேலை வாய்ப்பிற்காக சிவகங்கை, மதுரை, திருப்பூர் போன்ற நகரங்களை நாடி செல்ல துவங்கினர். இது மட்டுமின்றி மக்களை அச்சுறுத்தும் விதமாக அங்கு கடந்த 2 ஆண்டில் தொடர்ந்து 3 கொலை வரை நடந்ததால், இருந்த 10, 20 குடும்பத்தினர் கூட ஊரையே காலி செய்தனர். இது குறித்து செய்திகள் வெளியான நிலையில், அரசு நேரடி கள ஆய்வு செய்து மின்விளக்கு, தெருக்குழாய்களில் குடிநீர், பழுதடைந்துள்ள 5000 லிட்டர் குடிநீர் சுத்திகரிப்பு இயந்திரத்தை செப்பனிட்டு குடிநீர் கிடைக்க செய்துள்ளனர். இது போன்று அடிப்படை வசதிகள் கிடைத்த தால் நாட்டாகுடியை மக்கள் எட்டிப்பார்க்க துவங்கியுள்ளனர். சில நாட்களாக 5 குடும்பத் தினர் இங்கு வந்துள்ளனர். அவர்களை கோயில் பூஜாரி தங்கராஜ் வர வேற்றார். விவசாயம் செழிக்கதேவை சீரமைப்பு உப்பாறு ஆற்றில் வரும் தண்ணீரை நாட்டார் கண்மாயில் சேகரித்து, 200 ஏக்கரில் விவசாயம் செய்து வந்தனர். கடந்த அ.தி.மு.க., ஆட்சியில் நாட்டார் கண்மாயை அதிக ஆழமாக துார்வாரி விட்டனர். இதனால், கலுங்கு மற்றும் கால்வாய் மடை கள் மேடாகிவிட்டன. இதனால் கண்மாயில் தண்ணீர் இருந்தாலும், விவசாய தேவைக் குரிய தண்ணீர் கால்வாய் வழியே வெளியேற முடியாத நிலை உள்ளது. அதே போன்று விவசாய நிலங்களில் மண்டியுள்ள முட்புதர்களை அகற்ற வேண்டும். இவற்றை சீரமைத்தால் வரும் பருவ காலத்தில் பெய்யும் மழையை நம்பி விவ சாயிகள் விவசாயத்தை துவக்குவதற்காக, நாட்டாகுடியில் குடியேறுவார்கள் என தெரிவிக்கின்றனர்.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

அதிகம் விமர்ச்சிக்கப்பட்டவை