தேவகோட்டை - காரைக்குடிக்கு அரசு பஸ்கள் ஊர்களுக்கு செல்ல முடியாமல் மக்கள் தவிப்பு
சிவகங்கை: தேவகோட்டையில் இருந்து காரைக்குடி வழியாக மதுரை, திருச்சி செல்லும் அரசு பஸ்களுக்கு கண்டக்டர், டிரைவர்கள் இன்றி நேற்று மாலை பஸ்கள் இயக்கப்படாததால் பயணிகள் சிரமம் அடைந்தனர். தேவகோட்டை மற்றும் அதனை சுற்றியுள்ள முக்கிய நகரான காரைக்குடியில் இருந்து அரசு ஊழியர், ஆசிரியர், பள்ளி, கல்லுாரி மாணவர்கள் சென்று வருகின்றனர். தினமும் மாலையில் பள்ளி, கல்லுாரி முடியும் நேரத்தில் தேவகோட்டையில் இருந்து காரைக்குடி வழியாக செல்லும் அரசு பஸ்களின் மூலமே மாணவர்கள், ஆசிரியர்கள் காரைக்குடிக்கு செல்கின்றனர். இதற்காகவே தினமும் மாலை 4:10க்கு தேவகோட்டை-திருச்சி, மாலை 4:20க்கு தேவகோட்டை-மதுரை, 4:25 மணிக்கு ராமேஸ்வரம் -திருச்சி, 4:30 மணிக்கு தேவகோட்டை-மதுரை என அரசு பஸ்கள் இயக்கப் பட்டு வருகின்றன. இந்த பஸ்கள் மூலம் ஏராளமான மாணவர், ஆசிரியர், அரசு ஊழியர்கள் காரைக்குடிக்கு செல்கின்றனர். இந்நிலையில், நேற்று மாலை வரவேண்டிய இந்த பஸ்கள் அனைத்து கண்டக்டர், டிரைவர்கள் பற்றாக்குறையால் இயக்கப் படவில்லை. இதனால், நேற்று மாலை 4:00 மணியில் இருந்து பஸ்சிற்காக தேவகோட்டை பஸ் ஸ்டாண்டில் ஏராளமானவர்கள் காத்து கிடந்தனர். ஒரு வழியாக நீண்ட காத்திருப்பிற்கு பின் பயணி களுக்கு நிம்மதி அளிக்கும் விதமாக மாலை 4:50 மணிக்கு தேவகோட்டையில் இருந்து காரைக்குடி, மதுரை வழியாக திருநெல்வேலி செல்லும் அரசு பஸ் வந்ததால், பயணிகள் அந்த பஸ்சை பிடித்து தங்கள் ஊர்களுக்கு சென்றனர். இது குறித்து அரசு போக்குவரத்து கழக அதிகாரிகள் கூறியதாவது: காரைக்குடி-ராமேஸ் வரம் ரோட்டில் போக்கு வரத்து தடை ஏற்பட்டதால், இந்த பஸ்கள் கால தாமதமாக வந்துவிட்டது என தெரிவித்தனர்.