உள்ளூர் செய்திகள்

/ உள்ளூர் செய்திகள் / சிவகங்கை / திருப்புவனத்தில் மரங்கள் வெட்டி அகற்றம்: மக்கள் புகார்

திருப்புவனத்தில் மரங்கள் வெட்டி அகற்றம்: மக்கள் புகார்

திருப்புவனம் : திருப்புவனத்தில் சாலையை ஒட்டியுள்ள மரங்களை பலரும் தங் களது வீடுகள், கடைகளை மறைப்பதாக வெட்டி அகற்றி வருகின்றனர். புகார் அனுப்பியும் எந்த வித நடவடிக்கையும் எடுக்க வில்லை என புகார் எழுந்து உள்ளது. திருப்புவனம் பத்திரப்பதிவு அலுவலக வளாகத்தில் புதிய கட்டட பணிக்காக 50 ஆண்டு களை கடந்த பத்திற்கும் மேற்பட்ட மரங்கள் வெட்டி சாய்க்கப்பட்டன. மரங்களை அகற்றாமல் புதிய கட்டட பணிகளை மேற்கொள்ள வேண்டும் என பல்வேறு தரப்பினரும் கடந்த மூன்று மாதங் களாக கோரிக்கை விடுத்தும் வனத்துறை நேரில் வந்து பார்வையிடாததால், மரங்கள் வெட்டி சாய்க்கப்பட்டன. அதிகாரிகள் கூறிய தாவது: அனைத்து பத்திரப் பதிவு அலுவலகம் ஒரே டிசைனில் கட்டப் படுகிறது. அந்தவகையில் தான் திருப்புவனம் பத்திரப் பதிவு அலுவலகமும் கட்டப்படுகிறது. இதற்காக மரங்கள் வெட்டப்பட்டன, என்றனர்.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

முக்கிய வீடியோ