| ADDED : மார் 15, 2024 11:52 PM
காரைக்குடி : காரைக்குடியில் குடியுரிமை திருத்த சட்டத்தை கண்டித்து இ.கம்யூ., சார்பில் சாலை மறியல் போராட்டம் நடந்தது.காரைக்குடி அண்ணாதுரை சிலை அருகே குடியுரிமை திருத்த சட்டத்தை கண்டித்து நகர செயலாளர் சிவாஜி காந்தி தலைமையில் சாலை மறியல் போராட்டம் நடந்தது. போராட்டத்தில் ஏ.ஐ.டி.யு.சி., மாநில துணைத்தலைவர் பி. எல். ராமச்சந்திரன், சமநீதி மக்கள் கழக நிறுவனர் சகுபர் சாதிக், ஏ.ஐ.டி.யு.சி., போக்குவரத்து சங்க தலைவர் மணவழகன் இ.கம்யூ மாவட்டக்குழு உறுப்பினர்கள் ரிச்சர்டு, முத்து சரவணன் வீடு செயலாளர்கள் பழனியம்மாள் ஆரோக்கியம் மில்லி புஷ்பம் கருப்பையா உள்ளிட்ட பலர் கலந்து கொண்டனர்.