உள்ளூர் செய்திகள்

உழவுப்பணி தாமதம்

எஸ்.புதுார்: எஸ்.புதுார் ஒன்றியத்தில் மழை குறைவால் உழவுப்பணி தாமதமாகி வருகிறது. தமிழகத்தில் தென் மேற்கு பருவ மழை சில இடங்களில் பரவலாக பெய்தாலும் எஸ்.புதுார் போன்ற பெரும்பாலான பகுதிகளில் போதிய அளவில் பெய்யவில்லை. இப்பகுதி விவசாயிகள் வழக்கமாக ஆவணியில் உழவுப்பணிகளை துவக்கி, நெல் விதை பாவுவது வழக்கம். ஆனால் மழை குறைவால் இன்னும் உழவுப்பணி களையே துவக்க வில்லை. போர்வெல் மூலம் சாகுபடி செய்பவர்கள் மட்டும் நெல் நாற்றுக்களை வளர்த்துள்ளனர். இப்போது விதை பாவினால் தான் புரட்டாசியில் நடவுப்பணிகளை துவக்க சரியாக இருக்கும். தாமதமாகும் மழையால் எஸ்.புதூர் விவசாயிகளும் விவசாயப்பணிகளில் ஆர்வம் காட்டாமல் உழவுப்பணிகளை தாமதப்படுத்தி வருகின்றனர்.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

அதிகம் விமர்ச்சிக்கப்பட்டவை