உள்ளூர் செய்திகள்

/ உள்ளூர் செய்திகள் / சிவகங்கை / காரைக்குடியில் பாலிதீன் பறிமுதல்

காரைக்குடியில் பாலிதீன் பறிமுதல்

காரைக்குடி; காரைக்குடி மாநகராட்சியில் செக்காலை ரோடு, அண்ணா மார்க்கெட், 100 அடி ரோடு பகுதி கடைகளில் மாநகர் நல அலுவலர் வினோத் ராஜா, துப்புரவு அலுவலர் சுருளிநாதன் துப்புரவு ஆய்வாளர் ராமையன் உள்ளிட்டோர் ஆய்வு மேற்கொண்டனர். கடைகளில் தடை செய்யப்பட்ட பாலிதீன் விற்பனை செய்யப்பட்டது தெரியவந்தது. கடைகளுக்கு பாலிதீன் சப்ளை செய்யும் கோடவுனில் ஆய்வு மேற்கொண்டனர். ஆய்வில் 500 கிலோ பாலிதீன் பைகள் பறிமுதல் செய்ததோடு ரூ.10 ஆயிரம் அபராதமும் விதித்தனர்.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

புதிய வீடியோ