உள்ளூர் செய்திகள்

/ உள்ளூர் செய்திகள் / சிவகங்கை / பொங்கல் தொகுப்பு 4.16 லட்சம் கார்டு தேர்வு ஜன.10 முதல் 14 வரை வழங்கல்

பொங்கல் தொகுப்பு 4.16 லட்சம் கார்டு தேர்வு ஜன.10 முதல் 14 வரை வழங்கல்

சிவகங்கை : சிவகங்கை மாவட்டத்தில் அரிசி வாங்கும் ரேஷன் கார்டுதாரர்கள் 4.16 லட்சம் குடும்பத்தினருக்கு ஜன., 10 முதல் கடைகளில் பொங்கல் தொகுப்பு வழங்கப்படும்.மாவட்டத்தில் கூட்டுறவு, பாம்கோ, டி.என்.சி.எஸ்.சி., சார்பில் 829 ரேஷன் கடைகள் செயல்படுகின்றன.இவற்றின் கீழ் 4 லட்சத்து 15 ஆயிரத்து 523 குடும்பத்தினர் ரேஷனில் அரிசி பெறுகின்றனர். இவர்களுக்கு மட்டுமே பொங்கல் பரிசு தொகுப்பு ரேஷன் கடைகளில் ஜன.,10 முதல் 14 வரை வழங்கப்பட உள்ளன.இது தவிர இலங்கை அகதிகள் முகாம்களில் வசிக்கும் ஆயிரத்து 87 குடும்பத்தினருக்கும் தலா ஒரு கிலோ பச்சரிசி, சர்க்கரை, முழு நீல கரும்பு, தொகை ரூ.1000 வழங்கப்படும்.இதற்காக ஜன.,9 வரை அந்தந்த ரேஷன் கடை விற்பனையாளர் மூலம் வரிசை எண் கொண்ட டோக்கன் வழங்கப்படும். அந்த டோக்கனில் பொருள் வாங்க வரும் நாட்களும் குறிக்கப்படும். அதன்படி கார்டுதாரர்கள் தங்களது ரேஷன் கடைகளுக்கு சென்று, பொங்கல் பரிசு தொகுப்பினை வாங்கி செல்லலாம்.இதில் எந்தவித தவறுக்கும் இடமளிக்காமல் சரியான அளவில் பொருட்கள் வழங்கப்படுகிறதா என்பதை கூட்டுறவு இணை பதிவாளர் மற்றும் நுகர்பொருள் வாணிப கழக மண்டல மேலாளர் ஆகிய இருவரும் கண்காணிக்க வேண்டும் என கலெக்டர் ஆஷா அஜித் உத்தரவிட்டுள்ளார்.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

மேலும் செய்திகள்



அதிகம் விமர்ச்சிக்கப்பட்டவை