உள்ளூர் செய்திகள்

/ உள்ளூர் செய்திகள் / சிவகங்கை / தபால் நிலையங்கள் டிஜிட்டல் மயம்; ஆக. 2 ல் தபால் சேவை இருக்காது: கோட்ட கண்காணிப்பாளர் தகவல்  

தபால் நிலையங்கள் டிஜிட்டல் மயம்; ஆக. 2 ல் தபால் சேவை இருக்காது: கோட்ட கண்காணிப்பாளர் தகவல்  

சிவகங்கை; தபால் சேவைகளை டிஜிட்டல் மயமாக்கும் பணிக்காக ஆக.,2 ல் தபால் நிலையங்கள் செயல்படாது என சிவகங்கை கோட்ட கண்காணிப்பாளர் எஸ்.மாரியப்பன் தெரிவித்தார். அவர் கூறியதாவது: தபால் நிலையங்களில் மேம்படுத்தப்பட்ட திட்டங்களை செயல்படுத்தும் நோக்கில், 2.0 டிஜிட்டல் மயமாக்கும் பணி நடைபெற உள்ளது. இனி வரும் காலங்களில் தபால் சேவைகளை விரைந்து டிஜிட்டல் மயமாக்கி வழங்குவதற்காக, கம்ப்யூட்டரில் புதிய சாப்ட்வேர் பதிவேற்றம் செய்தல், புதிய சர்வரை உருவாக்குதல் உள்ளிட்ட பணிகளை மேற்கொள்ள சிவகங்கை கோட்டத்திற்கு உட்பட்ட அனைத்து தபால் நிலையங்களும் ஆக., 2 ல் செயல்படாது. அன்றைய தினம் வாடிக்கையாளர்களுக்கு தபால் நிலையங்களில் சேவைகள் இருக்காது. ஆனால், தபால் நிலையத்தில் கம்ப்யூட்டரில் சர்வர் பதிவேற்றம் செய்வதற்கான பணிகள் நடைபெறும். அதற்கு பின் புதிய தொழில்நுட்பத்துடன் ஆக., 4 முதல் சிவகங்கை கோட்டத்தில் உள்ள அனைத்து தபால் நிலையங்களும் செயல்படும், என்றார்.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

அதிகம் விமர்ச்சிக்கப்பட்டவை