உள்ளூர் செய்திகள்

/ உள்ளூர் செய்திகள் / சிவகங்கை / பிரதமரின் பயிர் காப்பீடு திட்டம்  பிரீமியம் நவ.15 கடைசி நாள் 

பிரதமரின் பயிர் காப்பீடு திட்டம்  பிரீமியம் நவ.15 கடைசி நாள் 

சிவகங்கை: பிரதமரின் பயிர் காப்பீடு திட்டத்தின் கீழ் நடப்பு சம்பா பருவ நெல்லுக்கு ஏக்கருக்கு பிரீமியமாக ரூ.496.98யை செலுத்தி பதிவு செய்து கொள்ளலாம் என தெரிவிக்கப்பட்டுள்ளது. மாவட்டத்தில் நடப்பு ஆண்டிற்கு பிரதம மந்திரி பயிர் காப்பீடு திட்டத்தில் காப்பீடு செய்ய பஜாஜ் அலையன்ஸ் நிறுவனம் தேர்வு செய்யப்பட்டுள்ளது. நடப்பு சம்பா நெல் பயிருக்கு விதைப்பு காலம் செப்., முதல் அக்., வரை. இப்பயிருக்கு காப்பீடு செய்ய ஏக்கருக்கு பிரீமிய தொகை ரூ.496.98யை அந்தந்த பகுதி தேசிய, கூட்டுறவு வங்கிகள், இ- சேவை மையங்களில் செலுத்தி பயிர் காப்பீடு செய்து கொள்ளலாம். நெற்பயிர் சாகுபடி செய்துள்ள விவசாயிகள் நவ., 15 க்குள் தங்களது பயிர்களுக்கான பிரீமிய தொகை செலுத்தி காப்பீடு செய்து கொள்ள வேண்டும். காப்பீடு செய்வதற்கான அடங்கல் புத்தகம் அனைத்து வி.ஏ.ஓ., அலுவலகங்களுக்கும் வழங்கப்பட்டுள்ளது. விவசாயிகள் இத் திட்டத்தின் கீழ் பதிவு செய்யும் போது முன்மொழிவு விண்ணப்பத்துடன் பதிவு விண்ணப்பம், வி.ஏ.ஓ., வழங்கும் அடங்கல் சான்று, ஆதார் எண்ணுடன் இணைக்கப்பட்ட வங்கி கணக்கு புத்தகத்தின் முதல் பக்க நகல், ஆதார் அட்டை நகலை இணைத்து காப்பீடு செய்து கொள்ள வேண்டும். காப்பீடு செய்யும் போது சாகுபடி செய்துள்ள கிராமத்தின் பெயர், புல எண், பரப்பளவு, வங்கி கணக்கு எண் ஆகியவை சரியாக உள்ளதா என சரிபார்த்து காப்பீடு செய்ததற்கான ரசீதினை பெற்றுக் கொள்ளவும் என தெரி விக்கப்பட்டுள்ளது.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !