| ADDED : பிப் 11, 2024 12:25 AM
சிவகங்கை: சிவகங்கை தொகுதியில் அதிக மதிப்பெண் பெறும் மாணவர்களுக்கு ரூ.10 ஆயிரம் வழங்கப்படும் என எம்.எல்.ஏ., செந்தில்நாதன் அறிவித்தார்.சிவகங்கை அரசு மகளிர் மேல்நிலைப்பள்ளி ஆண்டு விழா நடந்தது. தலைமை ஆசிரியர் சிவமணி தலைமை வகித்தார். எம்.எல்.ஏ., செந்தில்நாதன், மாவட்ட கல்வி அலுவலர் உதயகுமார், முன்னாள் எம்.எல்.ஏ., ராஜசேகரன், நகராட்சி தலைவர் துரைஆனந்த் கலந்து கொண்டனர். போட்டிகளில் வெற்றிபெற்ற மாணவர்களுக்கு பரிசு வழங்கி எம்.எல்.ஏ., செந்தில்நாதன் பேசுகையில், சிவகங்கை தொகுதிக்குட்பட்ட ஒவ்வொரு அரசு மேல்நிலைப்பள்ளிகளிலும் பிளஸ் 2வில் அதிக மதிப்பெண் பெறும் மாணவர்களுக்கு ரூ.10 ஆயிரம் வழங்கப்படும் என்றார்.உதவி தலைமை ஆசிரியர் மரகதம், கவுன்சிலர்கள் ராஜா, மகேஷ் குமார், பெற்றோர் ஆசிரியர் கழக நிர்வாகிகள், பள்ளி மேலாண்மை குழு உறுப்பினர்கள் கலந்து கொண்டனர்.* காளையார்கோவில் ஒன்றியம் கீழக்கோட்டை ஊராட்சி ஒன்றிய நடுநிலைப்பள்ளி ஆண்டு விழா நடந்தது. பள்ளி மேலாண்மை குழு தலைவி மலர்மதி தலைமை வகித்தார். பெற்றோர் ஆசிரியர் கழகத் தலைவி வசந்தமலர், முன்னாள் பெற்றோர் ஆசிரியர் கழகத் தலைவர் சுந்தரம் முன்னிலை வகித்தனர். அறிவியல் பட்டதாரி ஆசிரியர் ஆரோக்கியசாமி வரவேற்றார். தலைமை ஆசிரியர் தெய்வானை ஆண்டறிக்கை வாசித்தார். ஆசிரியர் பயிற்றுநர் வனிதா கலந்து கொண்டார். மாணவர்களின் கலை நிகழ்ச்சி நடந்தது. ஆசிரியர் மீனாட்சி நன்றி கூறினார்.* கல்குறிச்சியில் அரசு உயர்நிலைப்பள்ளியில் நடைபெற்ற ஆண்டு விழாவில் ராஜமனோகரன் வரவேற்றார். தலைமையாசிரியர் ஆரோக்கிய ராஜா தலைமை தாங்கினார்.தொடக்க கல்வி அலுவலர் புவனேஸ்வரன் முன்னிலை வகித்தார். போட்டிகளில் வெற்றி பெற்ற மாணவர்களுக்கு பரிசு, சான்றிதழ் வழங்கப்பட்டன.தமிழாசிரியர் சுந்தரராஜன் நிகழ்ச்சிகளை தொகுத்து வழங்கினார். ஆசிரியை மலர்விழி நன்றி கூறினார் .* காளையார்கோவில் அரசு மேல்நிலை பள்ளியில் ஆண்டு விழா நடைபெற்றது. தலைமை ஆசிரியை ஜோஸ்பின் லதா தலைமை வகித்தார். உதயகுமார் வரவேற்றார். பெற்றோர் ஆசிரியர் கழக தலைவர் ஜெயக்குமார், ஊராட்சி தலைவர் ஜோஸ்பின் மேரி, பள்ளி மேலாண்மை குழு தலைவர் காயத்ரி, ஆசிரியர் பயிற்சி பள்ளி ஆசிரியர்கள் ஆனந்தி, கவிக்குயில் பங்கேற்றனர். பள்ளி வளாகத்தில் சாரண ஆசிரியர் நாகராஜன் தலைமையில் மாணவர்கள் மரக்கன்றுகளை நட்டனர். ஆசிரியர், அலுவலர், பெற்றோர்கள் பங்கேற்றனர். ஆசிரியர் கோவிந்தராஜூ நன்றி கூறினார்.