உள்ளூர் செய்திகள்

/ உள்ளூர் செய்திகள் / சிவகங்கை /  பரிசளிப்பு விழா

 பரிசளிப்பு விழா

இளையான்குடி: இளையான்குடி மேல்நிலைப்பள்ளியில் 10 மற்றும் பிளஸ் 2 அரசுப் பொதுத்தேர்வில் முதல் மூன்று இடங்களை பெற்ற மாணவர்களுக்கும், ஆசிரியர்களுக்கும் பாராட்டு விழா தாளாளர் முசாபர் அப்துல் ரகுமான் தலைமையிலும், இளையான்குடி பேரூராட்சி தலைவர் நஜூமுதீன் முன்னிலையிலும் நடைபெற்றது. முன்னாள் முதல்வர் செய்யது உசேன் வரவேற்றார். பிற்படுத்தப்பட்டோர் மற்றும் சிறுபான்மையினர் நல அலுவலர் சையது முகைதீன் இப்ராகிம் அரசுப் பொதுத்தேர்வில் சிறப்பிடம் பெற்ற மாணவர்களுக்கு பரிசுகளை வழங்கினார். சாலையூர் மதரஸத்துல் மஜிது நிறுவனர் ஹமீதாவூது, முன்னாள் கபடி கேப்டன் அயூப்கான் ஆசிரியர்களுக்கு பரிசுகளை வழங்கினர். ஆட்சி குழு உறுப்பினர்கள், முன்னாள் உறுப்பினர்கள், தலைமை ஆசிரியர் முகம்மது இல்யாஸ், உதவி தலைமை ஆசிரியர்கள் சிக்கந்தர் சுலைமான்,சேக் உதுமான் நன்றி கூறினர்.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

மேலும் செய்திகள்