உள்ளூர் செய்திகள்

/ உள்ளூர் செய்திகள் / சிவகங்கை / மழை, வெள்ளத்தை சமாளிக்க ஏற்பாடு

மழை, வெள்ளத்தை சமாளிக்க ஏற்பாடு

திருப்புத்துார்: திருப்புத்துாரில் வடகிழக்கு பருவமழையை முன்னிட்டு நெடுஞ்சாலைத்துறையினர் முன்னெச்சரிக்கை நடவடிக்கை எடுத்துள்ளனர்.தமிழகத்தில் அக். 3ம் வாரத்தில் துவங்க உள்ள வடகிழக்கு பருவமழையை முன்னிட்டு அரசு முன்னெச்சரிக்கை நடவடிக்கை மேற் கொள்ள அறிவுறுத்தியுள்ளது.இந்நிலையில் திருப்புத்துார் மற்றும் சிங்கம்புணரி தாலுகாவில் கண்மாய்கள், ஆறுகளை ஒட்டியுள்ள ரோடுகளில் ஏற்படும் வெள்ள, மழை விளைவுகளை எதிர்கொள்ள நெடுஞ்சாலைத்துறை உபகோட்ட அலுவலகத்தில் முன்னெச்சரிக்கை நடவடிக்கை எடுத்துள்ளனர்.மீட்பு, பராமரிப்பு பணிகளுக்கு மணல் மூடைகள், காற்றில் விழும் மரங்களை அப்புறப்படுத்த மரம் அறுக்கும் கருவிகள், இயந்திரங்கள், வாகனங்களை தயார் நிலையில் வைத்துள்ளனர். பணியாளர்களுக்கு அதற்கான பயிற்சியையும் அளித்து வருகின்றனர். சேதமாகும் ரோடுகளை சீரமைக்கவும் தேவையான பொருட்களை இருப்பில் வைத்துள்ளனர்.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

முக்கிய வீடியோ