உள்ளூர் செய்திகள்

/ உள்ளூர் செய்திகள் / சிவகங்கை / பிள்ளையார்பட்டியில் பயனில்லாத பி.எஸ்.என்,எல்.,

பிள்ளையார்பட்டியில் பயனில்லாத பி.எஸ்.என்,எல்.,

திருப்புத்துார்: சிவகங்கை மாவட்டத்தின் முக்கிய ஆன்மிக சுற்றுலாத்தலம் பிள்ளையார்பட்டி. இங்கு விரத காலம் என்பதால் தினசரி பல மாவட்டங்களிலிருந்து வெளியூர் பக்தர்கள் பலர் வந்து செல்கின்றனர்.அலைபேசி பயன்பாடு அதிகமாக உள்ளது. ஆனால் பி.எஸ்.என்.எல். தொலைத்தொடர்பு சரியில்லாமல் அலைபேசிகளில் சரிவர பேச முடியாமல் பக்தர்கள் தவிக்கின்றனர்.பிள்ளையார்பட்டியில் பி.எஸ்.என்.எல். தொலைத் தொடர்புக்கான உயர் கோபுர வசதி இருந்தும் சரியாக சிக்னல்' கிடைப்பதில்லை.பலரும் வேறு தனியாருக்கு மாறினாலும் பலர் பி.எஸ்.என்.எல்லில் தொடர விரும்புகிறார்கள். சுற்றுலாத்தலமான பிள்ளையார்பட்டியில் பி.எஸ்.என்.எல்., சீரான தொலைத் தொடர்புக்கு தேவையான நடவடிக்கை எடுக்க வேண்டியது அவசியமாகும்.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

அதிகம் விமர்ச்சிக்கப்பட்டவை