மேலும் செய்திகள்
'தாயுமானவர்' திட்டத்தில் ரேஷன் பொருள் வழங்கல்
15-Sep-2025
சிவகங்கை; தீபாவளி பண்டிகையை முன்னிட்டு அக்.,5, 6ல் தாயுமானவர் திட்டத்தில் வீடு தோறும் முதியோர், மாற்றுத்திறனாளிகளுக்கு ரேஷன் பொருட்கள் வழங்கப்படும் என கூட்டுறவு இணை பதிவாளர் ராஜேந்திர பிரசாத் தெரிவித்தார். அவர் கூறியதாவது, இத்திட்டத்தில் 70 வயதிற்கு மேற்பட்டோர், மாற்றுத்திறனாளிகளின் வீடுகளுக்கே மாதந்தோறும் இரண்டாவது சனி, ஞாயிற்று கிழமைகளில் ரேஷன் பொருட்கள் வினியோகம் செய்யப்பட்டு வருகிறது. இந்நிலையில் தீபாவளி பண்டிகையை முன்னிட்டு முன்கூட்டியே ரேஷன் பொருட்களை வழங்கும் பொருட்டு, அக்., 5, 6 இரு நாட்களில் வீடு தேடி ரேஷன் பொருட்கள் கொண்டு வரப்படும். எனவே இந்த வாய்ப்பை முதியோர், மாற்றுத்திறனாளிகள் பயன்படுத்திக்கொள்ளலாம் என்றார்.
15-Sep-2025