குடியரசு தின விழா தடகள போட்டி
சிவகங்கை; சிவகங்கையில் குடியரசு தின விழாவை முன்னிட்டு மாவட்ட அளவிலான தடகள போட்டிகளை கலெக்டர் பொற்கொடி துவக்கி வைத்தார். சிவகங்கை முதன்மை கல்வி அலுவலர் (பொறுப்பு) மாரிமுத்து முன்னிலை வகித்தார். மாவட்ட கல்வி அலுவலர் (தொடக்க கல்வி) ராஜேந்திரன், மாவட்ட உடற்கல்வி ஆய்வாளர் கார்த்திகேயன் உட்பட பள்ளி உடற்கல்வி ஆசிரியர்கள் பங்கேற்றனர். இரண்டு நாட்கள் நடக்கும் போட்டிகளில் 86 வகையான தடகளம், 14, 17 மற்றும் 19 வயதிற்கு உட்பட்ட பிரிவு மாணவர்களுக்கு நடத்தப்படும். இதில், மாவட்ட அளவில் உள்ள பள்ளிகளில் இருந்து 1,000க்கும் மேற்பட்ட மாணவ, மாணவிகள் பங்கேற்கின்றனர். இதில் முதல் இரண்டு இடங்களை பெறும் மாணவ, மாணவிகள், மாநில அளவிலான போட்டியில் பங்கேற்க தகுதி பெறுவார்கள்.