உள்ளூர் செய்திகள்

/ உள்ளூர் செய்திகள் / சிவகங்கை / பிள்ளையார்பட்டியில் நாள் முழுவதும் அன்னதானம் நடைமுறைப்படுத்த கோரிக்கை

பிள்ளையார்பட்டியில் நாள் முழுவதும் அன்னதானம் நடைமுறைப்படுத்த கோரிக்கை

திருப்புத்துார்: பிள்ளையார்பட்டி கற்பகவிநாயகர் கோயிலில் விரைவாக நாள் முழுவதும் அன்னதான திட்டத்தை நடைமுறைப்படுத்த பக்தர்கள் கோரியுள்ளனர். தமிழகத்தில் குறிப்பிட்ட சில கோயில்களில் அறநிலையத்துறையினரால் நாள் முழுவதும் அன்னதான திட்டம் அமலில் உள்ளது.காலை, மதியம்,இரவு மூன்று நேரமும் கோயிலுக்கு வரும் பக்தர்களுக்கு உணவளிக்கப்படும். இத்திட்டம் பிள்ளையார்பட்டி கற்பகவிநாயகர் கோயில், கொடைக்கானல் பூம்பாறை முருகன் கோயில்களிலும் விரிவுபடுத்தப்படும் என ஏப்ரலில் நடந்த பட்ஜெட் கூட்டத் தொடரில் சட்டசபையில் அறிவிக்கப்பட்டது.இத்திட்டம் இக்கோயில்களில் இதுவரை நடைமுறைப்படுத்தப்படவில்லை. பக்தர்கள் விரைவாக இக்கோயில்களில் நாள் முழுவதும் அன்னதானத் திட்டத்தை நடைமுறைப்படுத்த கோரியுள்ளனர்.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

அதிகம் விமர்ச்சிக்கப்பட்டவை