உள்ளூர் செய்திகள்

/ உள்ளூர் செய்திகள் / சிவகங்கை /  பூவந்தி - சக்குடி ரோடு சீரமைக்க கோரிக்கை

 பூவந்தி - சக்குடி ரோடு சீரமைக்க கோரிக்கை

பூவந்தி: பூவந்தியில் இருந்து சக்குடி வழியாக மதுரை செல்லும் ரோட்டை சீரமைக்க வேண்டும் என வாகன ஓட்டிகள் வலியுறுத்தியுள்ளனர். சிவகங்கையில் இருந்து தென்காசி, துாத்துக்குடி, அருப்புக்கோட்டை செல்ல வரிச்சியூர், கருப்பாயூரணி வழியாக பலரும் சென்று வந்தனர். திருநெல்வேலி, துாத்துக்குடி செல்ல நீண்ட நேரமாவதுடன் மதுரை நகரில் போக்குவரத்து நெரிசலில் சிக்கி தவிக்க வேண்டியுள்ளது. இதனை தவிர்க்க பூவந்தியில் இருந்து சக்குடி வழியாக சாலை அகலப்படுத்தப்பட்டது.இதனையடுத்து தினசரி ஆயிரக்கணக்கான வாகனங்கள் இப்பாதையில் சென்று வருகின்றன. இந்த வழித்தடத்தால் சிவகங்கை மட்டுமல்லாது தேவகோட்டை, சூராணம், காளையார்கோயில் உள்ளிட்ட பகுதி மக்களும் பயன்பெற்று வருகின்றனர். விமான நிலையம்,ரயில் நிலையம் செல்ல இப்பகுதி மக்களுக்கு பூவந்தி - சக்குடி ரோடு மிகவும் பயனுள்ளதாக உள்ளது. பூவந்தியில் இருந்து அனஞ்சியூர் விலக்கு வரை மானாமதுரை கோட்டத்தின் கட்டுப்பாட்டிலும் அனஞ்சியூரில் இருந்து மணலுார் நான்கு வழிச்சாலை வரை மதுரை கிழக்கு கோட்டத்தின் கட்டுப்பாட்டிலும் உள்ளது. தினசரி ஆயிரக்கணக்கான வாகனங்கள் சென்று வரும் இப்பாதையில் பல இடங்களில் பள்ளங்கள் உருவாகி உள்ளன. பகலில் கூட சாலைகளில் பள்ளங்கள் இருப்பது தெரியாமல் வாகன ஓட்டிகள் அதில் சிக்கி விபத்திற்குள்ளாகின்றனர். பூவந்தி விலக்கில் இருந்து மணலுார் வரை சாலையின் இருபுறமும் தெரு விளக்குகள் இல்லை. ஒருசில இடங்களில் சிறிய எல்.இ.டி., விளக்குகள் மட்டுமே பொருத்தப்பட்டுள்ளன. இரவு நேரத்தில் அச்சத்துடனே இப்பாதையில் பயணம் செய்ய வேண்டியுள்ளது. இப்பாதையில் நாளுக்கு நாள் வாகனப்போக்குவரத்து அதிகரித்து வரும் நிலையில் சாலைகளில் உள்ள பள்ளங்களை சரி செய்ய நெடுஞ்சாலைத்துறையினர் நடவடிக்கை எடுக்க வேண்டும்.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

மேலும் செய்திகள்



முக்கிய வீடியோ