உள்ளூர் செய்திகள்

/ உள்ளூர் செய்திகள் / சிவகங்கை / மானாமதுரையில் கனமழை தேங்கும் நீரால் நோய் அபாயம்

மானாமதுரையில் கனமழை தேங்கும் நீரால் நோய் அபாயம்

மானாமதுரை : மானாமதுரையில் கனமழை பெய்து வருவதால் மண்பாண்ட தொழிற்கூடங்கள், தாழ்வான பகுதிகளில் மழை நீர் தேங்கி நிற்கிறது.சிவகங்கை மாவட்டத்தில் காரைக்குடி திருப்புத்துார், காளையார் கோயில், திருப்புவனம், மானாமதுரை இளையான்குடி உள்ளிட்ட பகுதிகளில் கடந்த சில நாட்களாக தொடர்மழை பெய்து வருகிறது. சாக்கடை கால்வாய்கள் முறையாக பராமரிக்கப்படாததால் ஆங்காங்கே மழை நீர் தேங்கி வருகிறது. மழைக்காலம் துவங்கியதை தொடர்ந்து தாழ்வான பகுதிகளில் மழை நீர் தேங்கி வருவதால் கொசுக்கள் மூலம் தொற்று நோய் பரவும் அபாயம் ஏற்பட்டுள்ளதாக பொதுமக்கள் தெரிவிக்கின்றனர்.இன்னும் 2 மாதம் மழை தொடரும் என்பதால் நகராட்சி நிர்வாகம் தாழ்வான பகுதிகளில் மழை நீர் தேங்காதவாறு நடவடிக்கை எடுக்க வேண்டும் என்று மக்கள் எதிர்பார்க்கின்றனர்.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

சமீபத்திய செய்தி