உள்ளூர் செய்திகள்

/ உள்ளூர் செய்திகள் / சிவகங்கை / ரூ.2.21 லட்சம் மதுபாட்டில்கள் திருட்டு

ரூ.2.21 லட்சம் மதுபாட்டில்கள் திருட்டு

திருக்கோஷ்டியூர்:சிவகங்கை மாவட்டம் சோலுடையான்பட்டி டாஸ்மாக் கடையின் பூட்டை உடைத்து ரூ.2.21 லட்சம் மதிப்புள்ள மதுபாட்டில்களை மர்மநபர்கள் திருடிச் சென்றனர். திருக்கோஷ்டியூர் அருகே சோலுடையான்பட்டியில் உள்ள இக்கடை (எண்:7747) மேற்பார்வையாளராக பாண்டித்துரை 51 உள்ளார். செப்., 20 காலை 6:00 மணிக்கு அப்பகுதி மக்கள் இக்கடை பூட்டு உடைக்கப்பட்டு கிடப்பதை பார்த்து அவருக்கு தெரிவித்தனர். அவர் வந்து கடையை திறந்து பார்த்தபோது 31 பெட்டிகளில் இருந்த ரூ.2.21 லட்சம் மதிப்பிலான மதுபாட்டில்கள் மர்மநபர்களால் திருடப்பட்டது தெரியவந்தது. திருக்கோஷ்டியூர் போலீசார் விசாரிக்கின்றனர்.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !