உள்ளூர் செய்திகள்

/ உள்ளூர் செய்திகள் / சிவகங்கை / சத்துணவு ஊழியருக்கு ரூ.9000 சம்பளம் : கூட்டத்தில் தீர்மானம்

சத்துணவு ஊழியருக்கு ரூ.9000 சம்பளம் : கூட்டத்தில் தீர்மானம்

சிவகங்கை : சத்துணவு, அங்கன்வாடி ஊழியர்களுக்கு குறைந்த பட்ச சம்பளம் ரூ.9000 வழங்க வேண்டும் என சிவகங்கையில் நடந்த மாவட்ட அமைப்பு குழு கூட்டத்தில் தீர்மானம் நிறைவேற்றினர்.சிவகங்கையில் நடந்த ஓய்வு பெற்ற சத்துணவு, அங்கன்வாடி ஊழியர் சங்க மாவட்ட அமைப்பு குழு கூட்டத்திற்கு உடையணசாமி தலைமை வகித்தார். மாநில குழு அமைப்பாளர்கள் பாண்டி, விஜயக்குமார், சக்தி பங்கேற்றனர்.இக்கூட்டத்தில் மாவட்ட குழு ஒருங்கிணைப்பாளராக உடையணசாமி, இணை ஒருங்கிணைப்பாளராக மணிமுரசு, மாவட்ட குழு நிதி காப்பாளர் நடராஜன், மாவட்ட குழு உறுப்பினர்கள் ராமானுஜம், சித்ரா, ஆறுமுகம், கனகஜோதி, பானுமதி, முத்தழகு ஆகியோர் தேர்வாகினர்.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

அதிகம் விமர்ச்சிக்கப்பட்டவை