உள்ளூர் செய்திகள்

/ உள்ளூர் செய்திகள் / சிவகங்கை / கரிசல்பட்டியில் சந்தனக்கூடு விழா

கரிசல்பட்டியில் சந்தனக்கூடு விழா

சிங்கம்புணரி, - எஸ்.புதுார் ஒன்றியம் கரிசல்பட்டியில் ஹஜ்ரத் பீர் சுல்தான் ஒலியுல்லா தர்கா சந்தனக்கூடு விழா பிப்.20ம் தேதி இரவு நடந்தது. வண்ண விளக்குகளால் அலங்கரிக்கப்பட்ட சந்தனக்கூடு முக்கிய வீதிகள் வழியாக ஹஜ்ரத் பீர் சுல்தான் ஒலியுல்லா தர்காவிற்கு வந்தது. அங்கு சந்தன குடத்திலிருந்து சந்தனம் எடுத்து பாத்தியா ஓதப்பட்டது. ஹிந்து, முஸ்லிம் உள்ளிட்ட அனைத்து சமுதாய மக்களும் கலந்து கொண்டனர்.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

மேலும் செய்திகள்





சமீபத்திய செய்தி