உள்ளூர் செய்திகள்

பள்ளி ஆண்டு விழா

சிவகங்கை : நாட்டரசன்கோட்டை கண்ணாத்தாள் நர்சரி, தொடக்க பள்ளி ஆண்டு விழா நடந்தது. கே.எம்.எஸ்.சி., மகளிர் மேல்நிலை பள்ளி தலைமை ஆசிரியை மகாலட்சுமி தலைமை வகித்தார். பள்ளி நிர்வாகி பிச்சை வரவேற்றார். முன்னாள் எம்.எல்.ஏ.,க்கள் ராஜசேகரன், குணசேகரன் முன்னிலை வகித்தனர். எல்.கே.ஜி., முதல் 5 ம் வகுப்பு வரை முதலிடம் பிடித்தவர்களுக்கு பேரூராட்சி தலைவர் பிரியதர்ஷினி, துணை தலைவர் கார்த்திகா விருது வழங்கினர். கே.எம்.எஸ்.சி., மகளிர் மேல்நிலை பள்ளி தலைவர் கண்ணப்பன், நல்லாசிரியர் கண்ணப்பன், பாலமுருகன் நர்சரி பள்ளி நிர்வாகி குமார், ஆர்த்தி, யுவராஜ், சாம்பவிகா பள்ளி செயலர் சேகர், விக்னேஸ்வரா பள்ளி நிர்வாகி ஜெயதாஸ், வருவாய் ஆய்வாளர்கள் சதீஷ்குமார், மூர்த்தி, ஜெயலட்சுமி, ஆசிரியை இந்திரா காந்தி பங்கேற்றனர். ஆசிரியர் ஆதவன் தொகுத்து வழங்கினார்.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

மேலும் செய்திகள்



அதிகம் விமர்ச்சிக்கப்பட்டவை