மேலும் செய்திகள்
சிவகங்கை குற்றப்பிரிவில் போலீசார் பற்றாக்குறை
16-Dec-2025
சிவகங்கை: இளையான்குடி அருகே இளமனுாரில் 45 நாட்களாக பாதுகாப்பு பணியில் உள்ள போலீசாருக்கு உணவு, பெட்ரோல் படி வழங்காததால் குடும்பத்தை பிரிந்து தவிப்பதாக புலம்பி வருகின்றனர். இளையான்குடி அருகே இளமனுாரில் சாதிய தலைவர்களின் போர்டுகளை அகற்றுவதில், இரு தரப்பினர் இடையே மோதல் ஏற்பட்டது. கடந்த 45 நாட்களாக அக்கிராமத்தில் போலீசார் பாதுகாப்பு பணியில் ஈடுபட்டு வருகின்றனர். இப்பணியில் ஆரம்ப கட்டத்தில் டி.எஸ்.பி., தலைமையில் 1 இன்ஸ்பெக்டர், 15 எஸ்.ஐ.,க்கள், போலீசார் 35, மொபைல் பார்ட்டி போலீசார் என ஒரு ஷிப்டுக்கு 58 பேர் வீதம் இரண்டு ஷிப்டுக்கு 116 பேர் வரை நியமிக்கப்பட்டுள்ளனர். இப்பாதுகாப்பு பணியில் சிவகங்கை, மானாமதுரை சப்- டிவிஷன் போலீசார் தவிர்த்து திருப்புத்துார், காரைக்குடி, தேவகோட்டை சப்- டிவிஷனில் வெகு துாரத்தில் உள்ள போலீஸ் ஸ்டேஷனில் இருந்து போலீசார் நியமிக்கப்பட்டு, இரவு பகலாக பாதுகாப்பு பணியை மேற்கொண்டு வருகின்றனர். தினமும் காலை 8:00 மணி முதல் இரவு 8:00 மணி வரை ஒரு ஷிப்டு போலீசார் பாதுகாப்பு பணியை முடித்து, வெளியூர்களுக்கு செல்ல முடியாமல் குடும்பங்களை பிரிந்து திணறி வருகின்றனர். அதே போன்று கடந்த 45 நாட்களாக பாதுகாப்பு பணியில் உள்ள போலீசாருக்கு உணவு மற்றும் பெட்ரோல் படி கூட அனுமதிக்கப்படவில்லை. இதனால் கடும் பணி நெருக்கடியில் தவித்து வருவதாக பாதுகாப்பு பணியில் உள்ள போலீசார் புலம்பி வருகின்றனர்.
16-Dec-2025