உள்ளூர் செய்திகள்

/ உள்ளூர் செய்திகள் / சிவகங்கை / அரசு பள்ளியில் மாணவன் பலி; மின் தாக்குதல் காரணம்?

அரசு பள்ளியில் மாணவன் பலி; மின் தாக்குதல் காரணம்?

வாசிக்க நேரம் இல்லையா? செய்தியைக் கேளுங்கள்

Your browser doesn’t support HTML5 audio

சிவகங்கை: சிவகங்கை சாக்கோட்டை அருகேயுள்ள அரசுப் பள்ளியில் படிக்கும் 9ம் வகுப்பு மாணவன் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டு உயிரிழந்தார். அவர் மின்சாரம் தாக்கி உயிரிழந்ததாக நண்பர்கள் கூறியுள்ளது, பெற்றோர் மத்தியில் அதிர்ச்சியை ஏற்படுத்தி உள்ளது.புதுக்கோட்டை மாவட்டம் அறந்தாங்கி அருகே உள்ள பத்தரசன் கோட்டையைச் சேர்ந்தவர் கைலாசம் மகன் சக்தி சோமையா 14. இவர் சிவகங்கை மாவட்டம் சாக்கோட்டை அருகே உள்ள பொய்யாவயல் அரசு உயர்நிலைப் பள்ளியில் ஒன்பதாவது படித்து வந்தார்.இந்நிலையில் அவர் உயிருக்கு ஆபத்தான நிலையில் காரைக்குடி அரசு தலைமை மருத்துவமனையில் சிகிச்சைக்காக சேர்க்கப்பட்டார். ஆனால், சிகிச்சை பலனளிக்காமல் அவர் உயிரிழந்தார். அவர் மின்சாரம் தாக்கி உயிரிழந்ததாக உடன் படிக்கும் மாணவர்கள் மற்றும் நண்பர்கள் புகார் கூறியுள்ளனர். மாணவனின் இறப்பு குறித்து சாக்கோட்டை போலீசார் விசாரணை நடத்தி வருகின்றனர். அரசு பள்ளியில் மாணவன் மின்சாரம் தாக்கி உயிரிழந்ததாக நண்பர்கள் கூறியுள்ளது மாணவர்கள் மற்றும் பெற்றோர் இடையே அதிர்ச்சியை ஏற்படுத்தி உள்ளது.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

வாசகர்கள் கருத்துகள் ( 3 )

Anantharaman Srinivasan
ஜன 24, 2025 20:53

இந்த மாணவன் மின்சாரம் தாக்கி இறந்ததை மூடி மறைக்க இனி தினமும் ஒவ்வொரு மந்திரியாய் கதையளப்பர்.


Ramesh Sargam
ஜன 24, 2025 20:52

அந்த பக்கம் முதல்வர் வரும்போது நிவாரணம் கொடுத்து மக்கள் வாயை அடைத்துவிடுவார்.


K.SANTHANAM
ஜன 24, 2025 17:21

அரசு தரப்பில் இனி கதைகள் கேட்கலாம்..


அதிகம் விமர்ச்சிக்கப்பட்டவை