உள்ளூர் செய்திகள்

/ உள்ளூர் செய்திகள் / சிவகங்கை / ரேஷனில் பொருட்கள் தட்டுப்பாடு

ரேஷனில் பொருட்கள் தட்டுப்பாடு

காரைக்குடி : காரைக்குடியில் உள்ள ரேஷன் கடைகளில் பொருட்கள் கிடைக்காமல் மக்கள் சிரமப்படுகின்றனர். காரைக்குடி மாநகராட்சிக்குட்பட்ட முத்துராமலிங்க தேவர் நகர் ரேஷன் கடையில் 300-க்கும் மேற்பட்ட ரேஷன் கார்டு தாரர்கள் உள்ளனர். இங்கு, அரிசி, சர்க்கரை, கோதுமை முறையாக வினியோகம் செய்வதில்லை என மக்கள் புகார் எழுப்பி வருகின்றனர். ஒருமுறை ரேஷன் கடைக்குச் சென்றால் ஒரு பொருள் மட்டுமே கிடைப்பதாகவும் மற்ற பொருட்கள் வாங்க ஒவ்வொரு முறையும் அலைய வேண்டியுள்ளதாக தெரிவிக்கின்றனர். அ.தி.மு.க., கவுன்சிலர் பிரகாஷ்: ரேஷன் கடை பணியாளரிடம் கேட்டால் முறையாக பொருட்கள் ஒதுக்கீடு செய்யவில்லை என்கின்றனர். சம்பந்தப்பட்ட அதிகாரிகளை தொடர்பு கொண்டால் அவர்கள் பதில் அளிப்பதில்லை என்றார்.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

அதிகம் விமர்ச்சிக்கப்பட்டவை