மேலும் செய்திகள்
பெட்ரோல் குடித்து ஒருவர் பலி
1 hour(s) ago
பயிற்சி முகாம்
1 hour(s) ago
சாய்பாபா கோயிலில் சிறப்பு பூஜை
1 hour(s) ago
தேவகோட்டையில் அம்பு எய்தல் வைபவம்
1 hour(s) ago
சிலை பிரதிஷ்டை
1 hour(s) ago
சிவகங்கை:லோக்சபா தேர்தல் நடக்க உள்ள நிலையில் சிவகங்கை மாவட்டத்தில் அ.தி.மு.க.,வில் கோஷ்டி பூசல் உச்சகட்டத்தை எட்டியுள்ளதாக நிர்வாகிகள் புலம்புகின்றனர். சிவகங்கை மாவட்ட ஜெ., பேரவை ஆலோசனைக் கூட்டம் அ.தி.மு.க., மாவட்ட செயலாளர் செந்தில்நாதன், ஜெ.பேரவை மாவட்ட செயலாளர் இளங்கோவன் தலைமையில் சிவகங்கையில் நடந்தது. முன்னாள் அமைச்சர் பாஸ்கரன், வடக்கு ஒன்றிய செயலாளரான பாஸ்கரன் மகன் கருணாகரன், சிவகங்கை நகர் செயலாளர் ராஜா உட்பட முக்கிய நிர்வாகிகள் பங்கேற்கவில்லை.ஜெ. பேரவை சார்பில் வைக்கப்பட்ட பிளக்ஸ்களில் பாஸ்கரன் படம் இல்லை. செந்தில்நாதன் பேசுவதற்கு முன்பாகவே சார்பணி நிர்வாகிகள் சிலர் அரங்கை விட்டு வெளியேறினர். சிவகங்கை நகரில் நடந்த ஆலோசனை கூட்டத்தில் நகர் அ.தி.மு.க.,நிர்வாகிகள் பெரும்பாலானோர் பங்கேற்கவில்லை. பாஸ்கரன் தரப்பினர் கூறுகையில், ஜெ.பேரவை மாவட்ட செயலாளர் எப்போதும் பாஸ்கரனை மதிப்பதில்லை, கூட்டங்களுக்கு முறையான அழைப்பும் அனுப்புவதில்லை. பிளக்ஸ்,நோட்டீஸ்களில் பாஸ்கரன் படத்தை பயன்படுத்துவதில்லை.தற்போது கட்சியின் அமைப்புச் செயலாளராக உள்ளார். அந்த பதவிக்காவது மரியாதை கொடுத்திருக்க வேண்டும். மரியாதை கொடுக்காததால் கூட்டத்தில் பங்கேற்கவில்லை என்றனர்.இளங்கோவன் கூறுகையில், இது ஜெ. பேரவை கூட்டம். அதனால் பேரவை செயலாளர் படத்தை மட்டும் பிளக்ஸ் பேனரில் வைத்துள்ளோம். அரங்கில் வைத்த பேனரில் பொதுச் செயலாளர் படத்தை தவிர யாருடைய படத்தையும் போடவில்லை.பாஸ்கரன் தரப்பினருக்கு பல முறை அழைப்பு கொடுத்தேன். அவர் வரவில்லை. அதேபோல் நகர செயலாளருக்கும் பல முறை அழைப்பு கொடுத்தேன்.நான் அனைவரிடமும் இணக்கமாகதான் உள்ளேன். மாவட்டத்தில் உள்ள அனைத்து நிர்வாகிகளுக்கும் அழைப்பு கொடுக்கப்பட்டது. கூட்டம் மிகவும் சிறப்பாக நடந்தது என்றார்.
1 hour(s) ago
1 hour(s) ago
1 hour(s) ago
1 hour(s) ago
1 hour(s) ago