| ADDED : ஜூலை 31, 2011 10:50 PM
சிவகங்கை : சிவகங்கை ரயில்வே ஸ்டேஷனில் ஒரு வாரமாக தொலைபேசிகள் செயல்படாததால் பயணிகள் அவதி அடைகின்றனர். சிவகங்கை வழியாக ராமேஸ்வரம் - சென்னை, ராமேஸ்வரம் வாரணாசி, புவனேஸ்வர், மானாமதுரை - திருச்சி வரை ரயில்கள் இயக்கப்படுகின்றன. இந்த ரயில்கள் மூலம் காரைக்குடி, திருச்சி, சிதம்பரம் போன்ற பெரிய கல்வி நிறுவனங்களுக்கு மாணவர்கள் சென்று வருகின்றனர். பாசஞ்சர் ரயில்களில் அரசு, தனியார் ஊழியர்கள் வந்து செல்கின்றனர். இது தவிர, சென்னை, வாரணாசி, புவனேஸ்வர் செல்ல இங்கு ரிசர்வேஷன் செய்கின்றனர். இதற்காக, ரயில்வே நிர்வாகம் சார்பில் ஸ்டேஷன் மாஸ்டர் அறை, ரிசர்வேஷன் மையத்தில் இலவச அழைப்பு எண்கள் உட்பட 4 தொலைபேசிகள் உள்ளன.
பழுது: கடந்த ஒரு வாரமாக, பயணிகள் முன்பதிவு, ரயில் நேரம் தொடர்பாக ஏற்படும் சந்தேகங்களை தீர்க்க, இந்த தொலைபேசிகளை தொடர்பு கொள்கின்றனர். ஆனால், தொலைபேசிகள் அனைத்து பழுதடைந்துள்ளதால், பயணிகள் அவதிக்குள்ளாகின்றனர்.