உள்ளூர் செய்திகள்

/ உள்ளூர் செய்திகள் / சிவகங்கை / சிங்கம்புணரி-காரைக்குடி பஸ் மீண்டும் இயக்க கோரிக்கை

சிங்கம்புணரி-காரைக்குடி பஸ் மீண்டும் இயக்க கோரிக்கை

திருப்புத்தூர் : நிறுத்தப்பட்டுள்ள சிங்கம்புணரி-காரைக்குடி பஸ்சை மீண்டும் விடக் கோரி பொதுமக்கள் கோரியுள்ளனர். சிங்கம்புணரியிலிருந்து காலை 8.50 மணிக்கு காளாப்பூர், எஸ்.வி.மங்கலம், மருதிப்பட்டி, திருக்களாப்பட்டி, காரையூர், திருப்புத்தூர் வழியாக காரைக்குடிக்கு பஸ் சென்றது.சிங்கம்புணரியிலிருந்து திருப்புத்தூர் வரையிலான கிராம மக்களுக்கு பயனுள்ளதாக இருந்தது. இந்நிலையில் கடந்த ஜூலை 1ம் தேதி முதல் இந்த பஸ் நிறுத்தப்பட்டுள்ளதால் கிராம மக்கள் பலரும் அவதிக்குள்ளாகியுள்ளனர். மீண்டும் இந்த பஸ் சர்வீசை துவக்க வேண்டும் என்று அப்பகுதி மக்கள் தமிழக முதல்வருக்கு மனு அனுப்பியுள்ளனர்.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

மேலும் செய்திகள்





அதிகம் விமர்ச்சிக்கப்பட்டவை