உள்ளூர் செய்திகள்

/ உள்ளூர் செய்திகள் / சிவகங்கை / ரூ.70 கோடியில் வளர்ச்சி பணிகள் நகராட்சி தலைவர் நாகராஜன் தகவல்

ரூ.70 கோடியில் வளர்ச்சி பணிகள் நகராட்சி தலைவர் நாகராஜன் தகவல்

சிவகங்கை : சிவகங்கை நகராட்சி தலைவர் பதவிக்கு காங்., சார்பில் நாகராஜன் வேட்பு மனு தாக்கல் செய்தார். அவர் கூறியதாவது: சிவகங்கை நகராட்சியில் கடந்த 5 ஆண்டுகளில் பல்வேறு நலத்திட்டங்கள் செயல்படுத்தப்பட்டுள்ளது.நகரில் நடைபெற்று வரும் பாதாள சாக்கடை திட்டத்திற்கு 25 கோடி ரூபாய் ஒதுக்கப்பட்டு பணிகள் நடைபெற்று வருகிறது. 5 கோடியே 50 லட்ச ரூபாயில் புதிய பேருந்து நிலையம், புதிய நகராட்சிக்கு 1 கோடியில் புதிய பிரம்மாண்டமான கட்டட வசதி செய்து கொடுக்கப்பட்டுள்ளது. காவிரி குடிநீர் திட்டம் 20 கோடி ரூபாய் செய்து தரப்பட்டுள்ளது. இத்திட்டத்தில் பொதுமக்களுக்கு தினமும் தண்ணீர் கிடைக்க மேலும் இரண்டு மேல்நிலை தொட்டிகள் அமைக்கப்படும். சாலைகளை மேம்படுத்த 15 கோடி ஒதுக்கப்பட்டு பணிகள் முடிக்கப்பட்டுள்ளது.பாரதி நகர், சுப்பிரமணியராஜா வீதியில் புதிய சாலைக்கு 3 கோடியே 30 லட்ச ரூபாய் நிதி ஒதுக்கப்பட்டுள்ளது. நகரில் 12 இடங்களில் 30 லட்ச ரூபாயில் பூங்கா அமைக்கப்பட்டுள்ளது. நகரில் 5 இடங்களில் ஹைமாஸ் விளக்குகள் அமைக்கப்பட்டுள்ளது. சிவகங்கை நகரில் உள்ள அனைத்து பகுதிகளுக்கும் சாலை வசதி அமைக்கப்பட்டுள்ளது. நடைபெற்று வரும் மீதமுள்ள பணிகளை விரைந்து முடிக்கப்படும். இத்திட்டங்களை மேம்படுத்த என்னை தேர்வு செய்ய வேண்டும் என சிவகங்கை நகர பொதுமக்களை அன்போடு கேட்டுக்கொள்கிறேன், '' என்றார்.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

மேலும் செய்திகள்





அதிகம் விமர்ச்சிக்கப்பட்டவை