உள்ளூர் செய்திகள்

/ உள்ளூர் செய்திகள் / சிவகங்கை / சிலிண்டர் பிரச்னைக்கு தீர்வு : ம.தி.மு.க.,வேட்பாளர் உறுதி

சிலிண்டர் பிரச்னைக்கு தீர்வு : ம.தி.மு.க.,வேட்பாளர் உறுதி

சிவகங்கை : சிவகங்கையில் ம.தி. மு.க., சார்பில் நகராட்சி தலைவர் பதவிக்கு போட்டியிட கார்கண்ணன் நேற்று வேட்புமனு தாக்கல் செய்தார். அவர் கூறுகையில், ''சிவகங்கை நகராட்சியில் அரைகுறையாக நிறுத்தப்பட்டு இருக்கும் பாதாள சாக்கடை திட்டத்தை மக்களுக்கு இடையூறு இல்லாமல் முழுமையாக நிறைவேற்றப்படும். அங்கீகாரம் பெறாமல் விடுபட்டு போன மனைகளுக்கு அங்கீகாரம் கிடைக்க நடவடிக்கை எடுக்கப்படும். பொதுமக்களின் பயன்பாட்டிற்காகவும், நகரை தூய்மையாக வைத்து கொள்ள முக்கிய இடங்களில் நவீன இலவச கழிப்பறை கட்டப்படும். நகராட்சியில் உள்ள அனைத்து பூங்காக்களும் சீரமைக்கப்படும். செயல்படாமல் கிடக்கும் மின் எரியூட்டு மயானத்தை செயல்படுத்த முயற்சி எடுக்கப்படும். நகரின் முக்கிய பஸ் நிறுத்தங்களில் பயணிகளின் வசதிக்காக நிழற்குடை அமைக்கப்படும். நகரில் சுகாதாரம் மேற்கொள்ளும் வகையில் குப்பை தொட்டிகள் அமைக்கப்படும். பழுதடைந்து கீழே விழும் நிலையில் உள்ள மின் கம்பங்கள் உடனடியாக மாற்றப்படும். பொதுமக்களின் நலன்கருதி குடிநீர் டெபாசிட் தொகை, குடிநீர் கட்டணம் குறைக்கப்படும். காஸ் சிலிண்டர் தட்டுப்பாட்டிற்கு நிரந்தர தீர்வு ஏற்பட முயற்சி மேற்கொள்வேன். '' என்றார்.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

மேலும் செய்திகள்