உள்ளூர் செய்திகள்

/ உள்ளூர் செய்திகள் / சிவகங்கை / மண்டல அளவிலான டேபிள் டென்னிஸ் போட்டி

மண்டல அளவிலான டேபிள் டென்னிஸ் போட்டி

திருமயம் : திருமயம் சண்முகநாதன் பொறியியல் கல்லூரியில் நடந்த திருச்சி அண்ணா தொழில் நுட்ப பல்கலை கழக இரண்டாவது மண்டல அளவிலான டேபிள் டென்னிஸ் போட்டியில் 15 கல்லூரி அணிகள் கலந்து கொண்டன மயிலாடுதுறை ஏ.வி.சி., பொறியியல் கல்லூரி வெற்றி பெற்று கோப்பையை கைப்பற்றியது. திருச்சி அண்ணா தொழில் நுட்ப பல்கலை க்கழகத்தின் கீழ் இயங்கும் கல்லூரி மாணவர்களுக்கான இரண்டாவது மண்டல அளவிலாள டேபிள் டென்னிஸ் போட்டி அரசம்பட்டி சண்முகநாதன் பொறியியல் கல்லூரியில் நடந்தது.

மாணவர் பிரிவில் 9 அணிகளும்,மாணவியர் பிரிவில் 6 அணிகள் உட்பட 15 அணிகள் கலந்து பங்கேற்றன. போட்டிகளை தாளாளர் பி.மணிகண்டன் தொடங்கி வைத்தார். இறுதிப் போட்டியில் மயிலாடுதுறை ஏ.வி.சி., பொறியியல் கல்லூரியும், அண்ணா தொழில் நுட்ப பல்கலை., க்கழக திருக்குவளை வளாக கல்லூரி அணியும் மோதின. இதில் மயிலாடுதுறை ஏவிசி பொறியியல் கல்லூரி அணி வெற்றி பெற்று கோப்பையை கைப்பற்றியது. மாணவியர் பிரிவில் புதுக்கோட்டை கிங்ஸ் பொறியியல் கல்லூரி அணி வெற்றி பெற்று கோப்பையைக் கைப்பற்றியது. பரிசளிப்பு விழாவிற்கு சண்முகநாதன் பொறியியல் கல்லூரி தாளாளர் பி.மணிகண்டன், செயலாளர் எம்.விஸ்வாதன் தலைமை வகித்து பரிசுகள் வழங்கினர். கல்லூரி இயக்குநர் டாக்டர். எஸ்.நிலவழகன் , முதல்வர் .ராம.முத்தையா,பேரா.எம்.வள்ளியப்பன் முன்னிலை வகித்தனர்.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

வாசகர்கள் கருத்துகள் ( 1 )

Padmasridharan
செப் 26, 2025 21:21

ஆளும் கட்சியை மாற்ற வேண்டுமென்பதே இந்நாட்டுக்கு மாற்றத்தை தரும் என்பதுதான் விஜயம் செய்யும் கட்சியின் கருத்து.


மேலும் செய்திகள்





அதிகம் விமர்ச்சிக்கப்பட்டவை