உள்ளூர் செய்திகள்

/ உள்ளூர் செய்திகள் / சிவகங்கை / கிராமங்களில் செவிலியர்கள் தங்கி சிகிச்சை அளிக்க நடவடிக்கை : ஊராட்சி தலைவர் வேட்பாளர்

கிராமங்களில் செவிலியர்கள் தங்கி சிகிச்சை அளிக்க நடவடிக்கை : ஊராட்சி தலைவர் வேட்பாளர்

காளையார்கோவில் : காளையார்கோவில் ஒன்றியம் முடிக்கரை ஊராட்சி தலைவர் பதவிக்கு கண்ணகி வேட்பு மனு தாக்கல் செய்தார். அவர் கூறியதாவது: ஒன்றிய குழு துணை தலைவராக இருந்து 13வது வார்டுக்கு ரூ.2.5 கோடி மதிப்பில் புதிய தார்சாலை, சிமென்ட் சாலை, கிராவல் சாலை, மெட்டல் சாலை உட்பட பல்வேறு வளர்ச்சி பணிகள் செய்யப்பட்டுள்ளது. நேர்மையான முறையில் தேசிய வேலை உறுதியளிப்பு திட்ட பணிகள் செயல்படுத்தப்படும். முடிக்கரை ஊராட்சிக்கு ராமநாதபுரம் கூட்டு குடிநீர் இணைப்பு பெற்று தண்ணீர் தட்டுப்பாட்டை நீக்குவேன்.முடிக்கரை,காயாஓடை துணை சுகாதார நிலையங்களில் கிராமப்புற செவிலியர்கள் தங்கி பணிபுரிய வலியுறுத்துவேன் என்றார்.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

மேலும் செய்திகள்





அதிகம் விமர்ச்சிக்கப்பட்டவை