உள்ளூர் செய்திகள்

/ உள்ளூர் செய்திகள் / சிவகங்கை / ஊழலற்ற நேர்மையான நிர்வாகம் காங்., அதிருப்தி வேட்பாளர் பிரபாகரன் தகவல்

ஊழலற்ற நேர்மையான நிர்வாகம் காங்., அதிருப்தி வேட்பாளர் பிரபாகரன் தகவல்

சிவகங்கை : சிவகங்கை நகராட்சி தலைவர் பதவிக்கு போட்டியிடும் அதிகார பூர்வ வேட்பாளரை எதிர்த்து காங்., நிர்வாகி எஸ்.டி. பிரபாகரன் நேற்று வேட்புமனு தாக்கல் செய்தார். அவர் கூறுகையில், ''என்னை வாழவைத்த சிவகங்கை நகர் மக்கள் நகாரட்சி தலைவராக தேர்வு செய்ய வேண்டும் என நகர் பொது மக்களையும், காங்.,தொண்டர்களையும் கேட்டுக்கொள்கிறேன். கடந்த 5 ஆண்டுகளாக ஊழல் மலிந்து சீரழிந்த சிவகங்கை நகராட்சியை ஊழலற்ற நேர்மையான வெளிப்படையான நிர்வாகம் நடைபெற பாடுபடுவேன். சமீபத்தில் போடப்பட்டு சிதைந்துபோன தார்சாலைகளை மீண்டும் தரமான சாலைகளாக அமைப்பேன். 15 நாட்களுக்கு ஒரு முறை பொது மக்களை சந்தித்து அவர்களது குறைகளை களைய பாடுபடுவேன்.

நகர் பகுதியில் பொதுமக்களின் பிரச்னையான கொசுவை ஒழிக்க நவீன இயந்திரம் பயன்படுத்தப்படும். தெருவிளக்கு, குடிநீர், கழிவு நீர் வாய்க்கால் போன்ற அடிப்படை பிரச்னைகள் முறையாக செயல்படுத்தப்படும். சிவகங்கை நகரை அழகுபடுத்த சிறப்பு திட்டத்தின் கீழ் மாதிரி பூங்கா உள்ளிட்ட சிறப்பு திட்டங்கள் நிறைவேற்றப்படும். காவரி கூட்டு குடிநீர் திட்டத்தின் கீழ் நகர் முழுவதும் தினமும் தண்ணீர் கிடைக்க ஏற்பாடு செய்யப்படும். நவீன முறையில் புதிய பேருந்து நிலையம் அமைக்கப்படும். வாரச்சந்தையில் அடிப்படை வசதிகள் செய்து தரப்படும், என்றார்.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

மேலும் செய்திகள்





அதிகம் விமர்ச்சிக்கப்பட்டவை