உள்ளூர் செய்திகள்

/ உள்ளூர் செய்திகள் / சிவகங்கை / சைக்கிளில் வந்து மனுதாக்கல் செய்த பா.ஜ., வேட்பாளர்

சைக்கிளில் வந்து மனுதாக்கல் செய்த பா.ஜ., வேட்பாளர்

சிவகங்கை : சிவகங்கை ஊராட்சி ஒன்றியம் ஓ.புதூர் சோழபுரம் ஒன்றிய குழு உறுப்பினர் பதவிக்கு பா.ஜ., சார்பில் சாந்தி செந்தமிழ் செல்வன் நேற்று சைக்கிளில் வந்து மனு தாக்கல் செய்தார். அவர் கூறியதாவது: ஓ.புதூர் முதல் பெருமாள்பட்டி வரை அனைத்து பகுதிகளிலும் மின்விளக்கு பொருத்தப்படும். நவீன கழிப்பறை வசதி செய்யப்படும். கொழுக்கட்டைபெட்டி பள்ளிக்கு மின்வசதி, குடிநீர், விளையாட்டு மை தான வசதி செய்யப்படும். அண்ணாநகர்,ஏ.பி.சி., காலனிகளுக்கு பொதுவான மண்டபம் அமைத்து தரப்படும்.அனைத்து மயானங்களிலும் சூரிய ஒளியிலான விளக்குகள் பொருத்தப்படும். பாதையில்லாத இடங்களுக்கு சிமென்ட் ரோடு வசதி, கருங்காபட்டி, அண்ணாநகர், சோழபுரம் பகுதியில் உள்ள கண்மாய்கள் தூரெடுப்பதோடு, தண்ணீர் வரும் ஓடைகளும் தூரெடுக்கப்படும்.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

மேலும் செய்திகள்





அதிகம் விமர்ச்சிக்கப்பட்டவை