உள்ளூர் செய்திகள்

/ உள்ளூர் செய்திகள் / சிவகங்கை / கிராமத்து சிறுவர்களுக்கு இலவச கம்ப்யூட்டர் கல்வி : அ.தி.மு.க.,உதயகுமாரன் உறுதி

கிராமத்து சிறுவர்களுக்கு இலவச கம்ப்யூட்டர் கல்வி : அ.தி.மு.க.,உதயகுமாரன் உறுதி

சிவகங்கை : சிவகங்கை ஊராட்சி ஒன்றியம் நாமனூர் அலவாக்கோட்டை ஒன்றிய குழு உறுப்பினர் பதவிக்கு அ.தி.மு.க.,சார்பில் மா.உதயகுமாரன் நேற்று வேட்பு மனு தாக்கல் செய்தார். அவர் கூறியதாவது: உண்மையாக வறுமைக்கோட்டிற்கு கீழ் உள்ளவர்கள் பட்டியல் தயாரிக்கப்படும்.முதல்வர் ஜெ., அறிவித்துள்ள அனைத்து நலத்திட்டங்களும் அனைவருக்கும் கிடைக்க பாடுபடுவேன்.விவசாயிகளுக்கு மானிய விலையில் இடு பொருட்கள் கிடைக்கவும், தெருவிளக்கு,மின்சாரம்,குடிநீர் கிடைக்க நடவடிக்கை எடுப்பேன்.மேலும் சுகாதாரம், ரோடு வசதி,பள்ளி தரம் மேம்படுத்த பாடுபடுவேன்.விவசாய சம்பந்தப்பட்ட சிறு தொழில் வளர்ச்சியை ஊக்குவிப்பதோடு, வாரந்தோறும் விழிப்புணர்வு முகாம் நடத்தப்படும்.நாமனூர் லட்சுமிபுரத்திற்கு தடையில்லா பஸ் வசதி செய்யப்படும். திருமண மண்டபம் இரண்டு கிராமத்திற்கு கட்டித்தரப்படும் என்றார்.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

மேலும் செய்திகள்





அதிகம் விமர்ச்சிக்கப்பட்டவை