உள்ளூர் செய்திகள்

/ உள்ளூர் செய்திகள் / சிவகங்கை / அரிய வகை மூலிகை செடிகள்: ஆராய்ச்சிக்காக வளர்ப்பு

அரிய வகை மூலிகை செடிகள்: ஆராய்ச்சிக்காக வளர்ப்பு

காரைக்குடி : ஐம்பதுக்கும் மேற்பட்ட அரிய வகை மூலிகை செடிகள் வளர்க்கப்பட்டு வருவதாக, செட்டிநாடு மானாவாரி செம்மண் ஆராய்ச்சி நிலைய தலைவர் பி. பாலகிருஷ்ணன் தெரிவித்தார்.அவர் கூறியதாவது: வறட்சி மாவட்டமான சிவகங்கை,சுற்றுப்பகுதிகளில் ஏராளமான விவசாயிகள் விவசாய தொழிலை நம்பி உள்ளனர்.குறிப்பாக, கரும்பு, நிலக்கடலை பயிர்களை விவசாயிகள் அதிகளவு பயிரிட்டுள்ளனர். தவிர, வறட்சி தாங்கி விளையக்கூடிய உளுந்து (வம்பன் 5 ரக), கால்நடைகளுக்கான தீவன உற்பத்தியை பெருக்கும் வகையில் 'கோ-29 ரக' தீவன சோளம்,பயிருக்கு தேவையான பூச்சி கொல்லி மருந்து ஆகியவை குறித்து ஆராய்ச்சி மேற்கொள்ளப்பட்டு வருகின்றன. இதற்கிடையில், தற்போது வெள்ளை எருக்கு, நொச்சி, ஆடாதொடை, சிறியாநங்கை, துளசி, கருந்துளசி, சர்க்கரை கொல்லி, கரு ஊமத்தை உள்ளிட்ட 50க்கும் மேற்பட்ட அரிய வகை மூலிகை பயிர்களை வளர்த்து வருகிறோம். இந்த மூலிகையில் எந்த மூலிகை செடிகள் வறட்சியை தாங்கி விளையக்கூடியது எனவும் ஆராய்ச்சி செய்து வருகிறோம். எதிர்காலத்தில், இதுபோன்ற மூலிகைகளை காப்பாற்றும் பொருட்டு இங்கு பயிரிடப்பட்டுள்ளது, என்றார்.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

மேலும் செய்திகள்