உள்ளூர் செய்திகள்

/ உள்ளூர் செய்திகள் / சிவகங்கை / தொடர் மழையால் வீடுகளில் கமகமக்கும் நத்தை குழம்பு

தொடர் மழையால் வீடுகளில் கமகமக்கும் நத்தை குழம்பு

சிங்கம்புணரி: சிங்கம்புணரியில் பெய்து வரும் தொடர் மழையால் கிராம வீடுகளில் நத்தை குழம்பு கமகமத்தது. தமிழகத்தில் கடுமையான வாட்டி வதைத்த கோடைக்குப் பிறகு பரவலாக மழை பெய்து வருகிறது. இம்மழை காரணமாக சிங்கம்புணரி பகுதியில் ஊருணி, குளம், வயல்களில் தண்ணீர் தேங்கியுள்ளது. இதனால் மண்ணுக்குள் இருந்த நத்தைகள் வெளியே வரத்துவங்கியுள்ளன. இந்த நத்தைகள் தண்ணீருக்கு அடியில் மண்டி கிடக்கும் பாசிகளை உண்டு வளர்கின்றன. நத்தைகளை கிராம மக்கள் உணவுக்காக சேகரித்து வருகின்றனர். அவற்றை உடைத்து கமகமக்கும் குழம்பாகவும், சிலர் சுவையான சூப் ஆகவும் வைத்து சாப்பிடுகின்றனர்.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !