உள்ளூர் செய்திகள்

/ உள்ளூர் செய்திகள் / சிவகங்கை /  ஆங்கில புத்தாண்டிற்காக பிள்ளையார்பட்டியில் சிறப்பு ஏற்பாடு

 ஆங்கில புத்தாண்டிற்காக பிள்ளையார்பட்டியில் சிறப்பு ஏற்பாடு

திருப்புத்துார்: ஆங்கில புத்தாண்டை முன்னிட்டு பிள்ளையார்பட்டி கற்பக விநாயகர் கோயிலில் சிறப்பு வழிபாடு இல்லாமல் வழக்கமான பூஜை நடைபெறும் என்று கோயில் நிர்வாகத்தினர் அறிவித்துள்ளனர். நகரத்தார் கோயிலான இங்கு கார்த்திகை துவங்கியது முதல் சபரிமலை, பழநிக்கு விரதமிருந்து செல்லும் பக்தர்கள் வருகை துவங்கியது. இதனால் கோயில் நடை மதியம் மூடப்படாமல் தரிசனம் இரவு 8:00 மணி வரை அனுமதிக்கப்படுகிறது. அத்துடன் ஆங்கிலப்புத்தாண்டு அன்று மேலும் பக்தர்கள் வருகை அதிகரிக்கும். இதற்காக சிறப்பு ஏற்பாடுகள் செய்யப்பட்டுள்ளது. கோயில் பரம்பரை அறங்காவலர்கள் கோனாப்பட்டு அரு.ராமசாமி, அரிமளம் நா.கண்ணன் தெரிவித்ததாவது: பொதுத் தரிசனத்திற்காக பக்தர்கள் வரிசையில் காத்திருந்து செல்ல கூடுதல் நிழற் கூரை மண்டபம் கோயில் முன் மண்டபம் அருகில் அமைக்கப்பட்டுள்ளது. மேலும் பக்தர்கள் வசதிக்காக உணவு,குடிநீர் வசதி ஏற்பாடு செய்யப்பட்டுள்ளது.' என்றனர். புத்தாண்டை முன்னிட்டு கோயிலில் சிறப்பு பூஜை ஏதும் நடைபெறாது. வழக்கம் போல் கோயில் அதிகாலை 4:00 மணிக்கு நடை திறந்து தமிழ் பூஜை நடைபெற்று மூலவர் தங்கக் கவசத்தில் அருள்பாலிப்பார். பக்தர்கள் தரிசனம் துவங்கும். மதியம் மூலவருக்கு அபிேஷகம் நடந்து தீபாராதனை நடைபெறும். உற்ஸவர் மூஷிக வாகனத்தில் மூலவர் சன்னதி அருகில் எழுந்தருளுவார்.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

புதிய வீடியோ