உள்ளூர் செய்திகள்

/ உள்ளூர் செய்திகள் / சிவகங்கை /  நெற்குப்பை நுாலகத்திற்கு மாநில விருது

 நெற்குப்பை நுாலகத்திற்கு மாநில விருது

திருப்புத்துார்: திருப்புத்தூர் ஒன்றியம் நெற்குப்பையில் சோமலெ நினைவு கிளை நூலகத்தின் வாசகர் வட்டத்திற்கு தமிழக அரசின் மாநில அளவிலான 'நூலக ஆர்வலர்' விருது வழங்கப்பட்டுள்ளது. மாவட்ட அளவில் நூலக இயக்கம் வளர முனைப்புடன் சிறப்பாக பங்காற்றியதற்காக நெற்குப்பை நூலகத்திற்கு பொது நூலக இயக்ககம் இந்த விருதை வழங்கியுள்ளது. இந்த நுாலகத்தில் தினமும் இலவச கம்ப்யூட்டர் வகுப்புகள், மாதந்தோறும் பள்ளி மாணவர்களுக்கான 'நூலேணி, பெரியவர்களுக்கான 'படிப்போம்! பகிர்வோம்!' என்ற நூல்களைப் பற்றிய கலந்துரையாடல், மே மாதம் முழுதும் கோடை முகாம், மாதம் இரண்டு 'நல் மாணவ வாசகர்' பரிசுகள், வருடத்திற்கு இரண்டு 'நல் வாசகர்' விருதுகள், இணையம் வழியாக அமெரிக்காவிலிருந்து ஆங்கில மற்றும் பொது அறிவு வகுப்புகள் என புதிய மாறுதலான திட்டங்கள் செயல்படுத்தப்பட்டுள்ளது. சிவகங்கை, புதுக்கோட்டை மாவட்ட கிராம மக்கள் இந்த நூலகத்தை பயன்படுத்தி வருகின்றனர். தினசரி 130க்கும் மேற்பட்ட வாசகர்கள் இந்த நூலகத்திற்கு வருகிறார்கள். நூலக வாரவிழாவை முன்னிட்டு மழலையர் தினம், பள்ளி மாணவர்கள் தினம், கல்லூரி மாணவர்கள் தினம், வாசகர்கள் தினம், மகளிர் தினம், மாற்றுத் திறனாளிகள் தினம், நூலக அறிமுக தினம் என ஏழு நாட்களும் நுாற்றுக்கணக்கான வாசகர்கள் பங்கேற்றனர். அன்னை தெரசா பல்கலை., முன்னாள் துணைவேந்தர் மணிமேகலை, பேராசிரியர் குமரப்பன், அழகப்பா பல்கலை கல்வியாளர்கள் சுரேஷ்குமார், ரவிச்சந்திரன் பங்கேற்றனர்.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

மேலும் செய்திகள்



முக்கிய வீடியோ