மேலும் செய்திகள்
மாவட்டத்தில் குழந்தைகள் தின விழா
15-Nov-2024
மானாமதுரை: மானாமதுரையில் கடந்த 2 நாட்களாக விடாமல் மழை பெய்து வரும் நிலையில் பள்ளிகளுக்கு விடுமுறை விடாததால் மாணவர்கள் பெற்றோர்கள் அவதிக்குள்ளாகினர்.தமிழகத்தில் கடந்த சில வாரங்களாக பருவமழை பெய்து வரும் நிலையில் அரசு, தனியார் பள்ளி மற்றும் கல்லுாரிகளுக்கு அந்த மாவட்டத்தில் பெய்யும் மழையளவை பொறுத்து மாவட்ட கலெக்டர்கள் பள்ளி, கல்லூரிகளுக்கு விடுமுறை அறிவித்து வருகின்றனர். சிவகங்கை மாவட்டத்தில் மாவட்ட நிர்வாக உத்தரவுப்படி அந்தந்த பகுதிகளில் மழைக்கு ஏற்ப அந்தந்த பள்ளி தலைமை ஆசிரியர்களே பள்ளிக்கு விடுமுறை அளிப்பது சம்பந்தமாக முடிவு எடுக்கலாம் என மாவட்ட அதிகாரிகள் தெரிவித்துள்ளனர்.கடந்த 2 நாட்களாக மானாமதுரை பகுதியில் காலை பள்ளி நேரத்தில் மழை பெய்தும் அந்தந்த பகுதிகளில் உள்ள பள்ளி தலைமை ஆசிரியர்கள் பள்ளிக்கு விடுமுறை விடாத காரணத்தினால் அரசு, தனியார் பள்ளி மாணவர்கள் நனைந்து கொண்டே பள்ளிக்கு சென்றனர். மாணவர்களுக்கு காய்ச்சல்,சளி, ஜலதோஷம் ஏற்படுகிறது.தலைமை ஆசிரியர்கள் மாணவர்களின் நலன் கருதி இனி வரும் நாட்களில் மழை பெய்தால் எவ்வித தாமதமும் இன்றி விடுமுறை குறித்து முடிவு எடுக்க வேண்டுமென்று பெற்றோர்கள் எதிர்பார்க்கின்றனர்.
15-Nov-2024