உள்ளூர் செய்திகள்

/ உள்ளூர் செய்திகள் / சிவகங்கை /  18 வயது பூர்த்தியான மாணவர்கள் ஜன.1 முதல் விண்ணப்பிக்கலாம்

 18 வயது பூர்த்தியான மாணவர்கள் ஜன.1 முதல் விண்ணப்பிக்கலாம்

சிவகங்கை: சிவகங்கை மாவட்டத்தில் 2026 ஜன.1 முதல் 18 வயது பூர்த்தியாக உள்ள கல்லுாரி மாணவர்கள் தங்களது பெயர்களை வாக்காளர் பட்டியலில் சேர்ப்பதற்கு உரிய ஆவணங்களுடன் அந்தந்த தாசில்தார் அலுவலகங்களிலோ அல்லது இணையதளம் வாயிலாகவே விண்ணப்பிக்கலாம் என கலெக்டர் பொற்கொடி தெரிவித்தார். அவர் கூறியதாவது: தேர்தல் ஆணையம் அனுமதித்துள்ள 13 ஆவணங்களில் தனது ஆவணம், தனது பெற்றோர் இருவரது ஆவணம் ஆகியவற்றை அளித்து சம்பந்தப்பட்ட வாக்காளர் பதிவு அலுவலர்கள் அலுவலகங்களிலோ அல்லது தாசில்தார், மாநகராட்சி, நகராட்சி அலுவலங்களின் தேர்தல் பிரிவுகளிலோ அளிக்கலாம். அல்லது voters.eci.gov.inஎன்ற இணையதளம் மூலமாகவும் படிவம் 6ல் விண்ணப்பிக்கலாம். 2026ஆம் ஆண்டு ஏப்.1, ஜூலை 1 மற்றும் அக்.1 ஆகிய தேதிகளில் 18 வயதை பூர்த்தி செய்ய உள்ள மாணவர்கள் மற்றும் இதர பிரிவினர் முன்னதாக விண்ணப்பப் படிவங்களை வழங்கலாம். அந்தந்த காலாண்டுகளில் 18 வயது பூர்த்தியான உடன் அவர்களது பெயர்கள் வாக்காளர் பட்டியலில் சேர்க்கப்படும் என்றார்.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

மேலும் செய்திகள்